23 January 2015

29-01-2015 ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம்

கடந்த ஆண்டே நிரப்பியிருக்க வேண்டிய ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.இதுவரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு தலைவர்கள் குரல் கொடுத்தும் அரசு மவுனம் சாதித்து வருகிறது.

பணிநியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் பலமுறை சென்னை சென்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வரின் தனிபிரிவில் மனு கொடுத்தனர் பயனில்லை. SC-ST கமிஷனிடம் மனு கொடுத்து அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை.

தற்போதைய நிலவரப்படி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினால் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.ஆனால் அவருக்கு நேரமில்லையா அல்லது உத்தரவு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.விரக்தியில் உள்ள ஆசிரியர்கள் சென்னை கமிஸனரிடம் அனுமதி பெற்று சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 29-01-2015 அன்று உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளனர்.ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறையில் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென உங்கள் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை அகிலன் 8608224299 கள்ளர் நலத்துறை ஜெகன் 9442880680

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வுக்கான வினா-விடை வெளியீடு

ஆசிரியர்தேர்வு வாரியம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு வினாக்களுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டுள்ளது. விடை வேறுபாடுகள் குறித்து முறையீடுகள் ஏதேனும் இருப்பின் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் 29.01.2015 க்குள் TRB க்கு தெரிவிக்கவேண்டும்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...