28 June 2022

 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: சம்பளம், தேர்வு முறை என்ன?



Tamilnadu schools appoints 13331 temporary teachers apply soon: தமிழக அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், இதற்கான தேர்வு முறை மற்றும் அவர்களுக்கான சம்பளம் ஆகிய விவரங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


தகுதிகள்


இந்தப் பணியிடங்களுக்கு ஆசிரியர் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இவர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.


தேர்வு முறை


இந்தப் பணியிடங்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து நியமித்துக் கொள்ளலாம்.


ஊதிய விவரம்


இடைநிலை ஆசிரியர்கள் - ரூ. 7,500


பட்டதாரி ஆசிரியர்கள் - ரூ. 10,000


முதுநிலை ஆசிரியர்கள் - ரூ. 12,000


காலியிடங்களை தெரிந்துக் கொள்வது எப்படி?


இந்த காலியிடங்களைப் பற்றிய விவரங்கள் அறிய, இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்புக் கொண்டு, எந்ததெந்தப் பகுதிகளில் காலியிடங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.


அதேபோல், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் காலியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.


எனவே உங்களுக்கு அருகாமையில் உள்ளப் பள்ளியில் காலியிடங்கள் இருப்பது தெரிய வந்து, நீங்கள் அதற்கு தகுதியானவர் என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து, வரபெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அதிலிருந்து தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்கள், அடுத்த ஓராண்டிற்கு மேற்கூறிய ஊதிய அடிப்படையில் பணிபுரியலாம்.

 தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை 3 ஆண்டுகளுக்கு நீடித்து அரசாணை வெளியீடு 





:தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை 3 ஆண்டுகளுக்கு நீடித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் 2011-2012ம் ஆண்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளுக்கு 1,590 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் சேர்த்து மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதை எதிர்நோக்கி கூடுதலாக 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யப்பட்டன.


மொத்தம் 8,462 தற்காலிக பணியிடங்களுக்கு கடைசியாக 1-1-2019 முதல் 31-12-2021 வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. மேற்கண்ட பணியிடங்களுக்கான தற்காலிக நீட்டிப்பு 31-12-2021 உடன் முடிவடைந்ததால் இப்பணியிடங்களுக்கு 1-1-2022 முதல் 31-12-2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளி கல்வி ஆணையர் அரசை கேட்டுக்கொண்டிருந்தார்.


 இந்நிலையில், இந்த 8,462 தற்காலிக பணியிடங்களுக்கு 1-1-2022 முதல் 31-12-2024 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையிலும் அக்னிபத் திட்டம்; கொந்தளிக்கும் ஆசிரியர்கள்!



தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் என்பது தமிழ்நாட்டிலும் அக்னிபத் திட்டத்தை செயல்படுத்துவது போல் இருப்பதாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இன்று (ஜூன் 28) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தின் முக்கிய நுழைவு வாயில் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் உள்ளே செல்லுமாறு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.


பின்னர், பள்ளிக்கல்வித் துறை அலுவலக வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் ரவி கூறுகையில், "கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற 30,000 ஆசிரியர்கள் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆசிரியர் தேர்வில் தகுதி பெற்றவர்கள் பணிக்காக, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.



அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதி எண் 177 படி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் 13,331 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் எட்டு மாதத்திற்கு நியமனம் செய்வதாக அறிவித்துள்ளார்.


அதேபோல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டம் பெற்றவர்களை பணியில் நியமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கும்பொழுது, தேர்வில் தகுதி பெறாத அவர்களை நியமனம் செய்யக்கூடாது. அவர்கள் எட்டு மாதத்திற்கு பின்னர் எங்கே சென்று பிச்சை எடுப்பார்கள். அக்னிபாத் திட்டத்தை போன்று பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் இருக்கிறது.


பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது, ஆசிரியர் நியமனத்திற்கு மட்டும் நிதி இல்லை எனக் கூறுவது சரியாக இருக்காது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆத்தூர் கூட்டத்தில் 80% திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். மீதமுள்ள 20% திட்டங்களில், ஆசிரியர் தேர்வில் தகுதி பெற்றவர்களை நியமனம் செய்வதற்கு முதல் சட்டமாக நிறைவேற்ற வேண்டும்" என தெரிவித்தார்.


தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியை கவிதா, "நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் அரசு எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. மேலும் தகுதியான ஆசிரியர்கள் இருக்கும்பொழுது, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டம் பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது." என கூறினார்.

 2,823 பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!!!




தமிழக நீர்வளத் துறையில் 2, 823 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.


இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், 1000க்கும் மேற்பட்ட பாசன உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், பணியிடங்கள், விவரம், ஊதியம், விண்ணப்பிக்கும் தேதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இரண்டு அல்லது நான்கு நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டிஎன்பிஎஸ்சி க்கு தயாராபவர்கள் இந்த தேர்வுக்கும் தயார்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...