Posts

Showing posts from November 20, 2022
Image
 டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு 1.31 லட்சம் பேர் ஆப்சென்ட்! டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை, 1.31 லட்சம் பேர் எழுதவில்லை. தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை எழுத 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும், 1080 இடங்களிலும், சென்னையில் மட்டும் 149 இடங்களிலும் நடைபெற்றது. 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்கை குறி முறையில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை, 1.31 லட்சம் பேர் எழுதவில்லை; 1.90 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். குரூப்-1 முதல் நிலை தேர்வை எழுத 3.22 லட்சம் பேர் விண்ணப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.
Image
  4 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அரசுப் பணியாளா் சங்க மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தல் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில தலைவா் ப.குமாா் வலியுறுத்தினாா். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில தலைவா் ப.குமாா் வலியுறுத்தினாா். நாமக்கல்லில் அந்த சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களிடம் சுரண்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனை தவிா்த்து மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக நிா்வாகக் கட்டமைப்பை மாற்றும் வகையில், அரசுத் துறைகளை தனியாா்மயமாக்கும் முயற்சியாக அரசாணை எண் 115 உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். கடந்த 2010-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி, 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றிய தற்காலிக, தினக்கூலி