Posts

Showing posts from June 3, 2023
Image
  TNEB 54 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப வலுக்கும் கோரிக்கை! தமிழகத்தில் மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் அதனை உடனே நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதனால் பல இடங்களில் உயர் மின்னழுத்தம் காரணமாக வேலை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் மின் வாரியத்தில் கள பிரிவில் 40 ஆயிரம் பணியிடங்கள், உதவி பொறியாளர் உட்பட மொத்தம் 54 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த பணியிடங்கள் அனைத்தும் மின் வாரியம் மூலம் நடத்தப்படும் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் காரணமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில் கள பிரிவு ஊழியர்களை மின் வாரியம் நியமிக்க அரசு அனுமதி அளித்து 10,200 பேரை தேர்வு செய்ய 2022 ஆகஸ்ட் மாதம் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் 9 மாதங்கள் ஆன நிலையில் அனுமதி வழங்கமால் இருப்பதால் காலி பணியிடங்கள
Image
  கருணாநிதி அறிமுகப்படுத்திய கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தொடங்கப்படுமா? அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியிலேயே கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் 2006-2011 வரை முதல்வராக இருந்த மு.கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்போது 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, அதற்கான தனிப் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில், கணினி அறிவியல் பாடத்தை கைவிட்டு, அறிவியல் புத்தகத்திலேயே கணினி அறிவியலுக்கு 3 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் விருப்ப பாடமாக உள்ளது. அனைத்து துறைகளிலும் கணினியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும் இந்த காலக்கட்டத்தில், அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடத்தை தனிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்கின்றனர் கணினி அறிவியல் பட்டதாரிகள். 1-ம் வகுப்பு முதல்... இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ப