ஆதிதிராவிடட் மற்றும் கள்ளர் நலத்துறைப்பள்ளிகளில் அந்தந்த இனத்தவர் மட்டும் அல்லாது மற்ற இனத்தவரையும் பணிநியமனம் செய்ய வேண்டும் என சுடலைமணி, ராமர் தொடர்ந்த வழக்கானது இறுதி விசாரணையை எட்டியுள்ளது இவ்வழக்கு மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது... அரசு தரப்பில் வழக்குரைஞர் நெல்லைப்பாண்டியனும் எதிர் தரப்பும் ஆஜராவார்கள் என தெரிகிறது
4 January 2015
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், நடக்கவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான கேள்வித்தாள் கோவை வந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான (2013-- -14, 2014---15) போட்டித்தேர்வுகள், ஜன., 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், 19 மையங்களில், 7500 பேர் தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.இத்தேர்வுக்கான, பணிகள் கோவையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், தேர்வு மையங்கள் ஆய்வு, மைய பொறுப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களை தேர்வு செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கேள்வித்தாள்கள் கோவைக்கு வந்தன. இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வணிகவியல் உட்பட பாடவாரியாக கேள்வித்தாள் கட்டுக்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில், காவல்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு, குறிப்பிட்ட சில அலுவலர்கள், அதிகாரிகள் தவிர பிறர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...