12 July 2017

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவது நிகழும் பணப்பரிமாற்றங்களை ஒழுங்கு செய்ய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்காக பல்வேறு வழிமுறைகளும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு இன்று புதிய அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 567678 மற்றும் 56161 ஆகிய இரு எண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் பயனாளர்கள். தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

அதற்கு முதலில் UIDAI என்று டைப் செய்து இடைவெளி விட்டு முதலில் முதலில் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து, மீண்டும் ஒரு இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்ட எண்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பலாம்.

இவ்வாறு மத்திய அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மருத்துவ சேர்க்கையில் 85% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு


எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  

இந்நிலையில், இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தர்னிஸ் குமார், வி.எஸ்.சசி சச்சின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் மேலும் 4 மாணவர்கள் அரசின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நளினி சிதம்பரம் ஆகியோர் ஆஜராகினர். அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ஆஜராகி, நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளை மக்கள் தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளன. மாநிலப் பாடத்திட்டத்தில் 4.2 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 4000 மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 தேர்வு எழுதினர்.கிராமப்புறங்களில் சிபிஎஸ்சி பாடத்திட்ட பள்ளிகள் மிகக்குறைவு. நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 80 ஆயிரம்பேர் தேர்வு எழுதினர். 

இதில் 2000 பேர்  சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். சிபிஎஸ்சி மாணவர்கள் 2000 பேர் தேர்வு எழுதியதில் 520 பேர் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் உள் இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக சேர்க்கை கிடைக்கும். எனவே, தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்கக் கூடாது  என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

தொலைநிலையில் பி.இ., படிக்க தடை

'தொலைநிலை கல்வியில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமா பட்டங்கள் பெற்றால் செல்லாது' என, அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.

இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இன்ஜினியரிங், தொழிற்நுட்பம், கட்டடக் கலை, நகர கட்டமைப்பு, பார்மசி, ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழிற்நுட்பம், 'அப்ளைட் ஆர்ட்ஸ்' ஆகியவற்றில், இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளை, தொலைநிலை கல்வியில் படிக்க, அங்கீகாரம் வழங்கப்படவில்லை.எனவே, இந்த படிப்புகளை தொலைநிலையில் படித்து பட்டம் பெற்றால், அது செல்லாது. இதை கல்வி நிறுவனங்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வியில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வி பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தொடக்கக் கல்வித் துறையில், அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாக இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார். 

பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனராக, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் சசிகலா நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிறப்பாசிரியர் TET தேர்வு: இளம் பட்டதாரிகளுக்கு சிக்கல்


தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, 10 ஆண்டுகளாக நடத்தாததால், அரசின் சிறப்பாசிரியர்களுக்கான போட்டி தேர்வில், இளம் பட்டதாரிகள் பங்கேற்க முடியாத நிலை உருவாகிஉள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி என, நான்கு படிப்புகளில், சிறப்பு பாட ஆசிரியர்களாக, 2,500 பேர் பணிபுரிகின்றனர். மேலும், 5,166 இடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,188 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 19ல், போட்டித் தேர்வு நடக்க உள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இதில் உள்ள நிபந்தனைகளால், சிறப்பாசிரியர் தேர்வை, இளம் பட்டதாரிகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலசங்கத்தின் மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 5,000 கலை ஆசிரியர் பணியிடங்களை, விரைந்து நிரப்ப வேண்டும். சிறப்பாசிரியர் பணிக்கு போட்டி தேர்வு நடத்துவது வரவேற்கத்தக்கது.

ஆனால், போட்டி தேர்வு எழுதுவதற்கு தேவையான தகுதியான, தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பு, 2007 முதல் நடத்தப்படவில்லை.எனவே, இளம் தலைமுறை மாணவர்கள், தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை முடிக்காததால், போட்டி தேர்வில் பங்கேற்று, அரசு பணியில் சேர முடியாத சூழல் உள்ளது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இளம் தலைமுறை பட்டதாரிகள், சிறப்பாசிரியர்களாக அதிகம் இடம் பெற்றால், கற்பித்தலிலும், தரத்திலும் மாற்றம் வரும். எனவே, தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, தாமதமின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...