Posts

Showing posts from April 22, 2019
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க  திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை  அறிவித்துள்ளது. ஏழை பெற்றோரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்தச் சட்டம். அதன்படி தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான ஆவணங்கள்: வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்.22ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம்
Image
மின்சாரமே பார்த்ததில்லை, பத்தாவதில் பள்ளியில் முதலிடம், ப்ளஸ் டூவில் 524 - சஹானா நிமிர்ந்து நிற்கக்கூட முடியாத சிறிய அளவிலான குடிசை வீடு, மின்சாரம் இல்லாததால் எப்போதும் வெளிச்சத்தைப் பார்த்ததில்லை என அந்த வீட்டினுள் படர்ந்துள்ள இருள் சொல்லாமல் சொல்கிறது கஜா புயலுக்கு தான் இரையானதை. குருவிக் கூட்டைவிட சற்றுப் பெரியதாக இருக்கிறது அவ்வளவே. ஆனால் அதன் உள்ளேயிருந்து வீசிய வெளிச்சம் அளவில்லாதது. ஆம், நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்று நம்மை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகிறார் தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.இவர் அப்பா கணேசன் கூலித் தொழிலாளி. பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயிரி கணிதவியல் பாடப்பிரிவில் படித்து 600 க்கு 524 மதிப்பெண் எடுத்து அசத்தியிருக்கிறார்.வறுமையின் கோரப் பிடியில் அவருடைய குடும்பம் சிக்கித் தவிக்கிறது. நல்ல கல்வி, குடும்ப கஷ்டத்தைப் போக்கும் என நினைத்து நன்றாகப் படித்து தன்னுடைய குடும்ப வறுமையை விரட்டப் போராடிக்கொண்டிருக்கிறார். சஹானாவிடம் பேசினோம். ``எங்க அப்பா கணேசன் டெய்ல
இன்ஜி., சேர்க்கைக்கான பதிவு மே, 2ம் தேதி ஆரம்பம் பி.இ., -- பி.டெக்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 2ம் தேதி துவங்குகிறது. இட ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங், ஜூன், 20ல் துவங்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ள இவை, உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அங்கீகாரத்தின் கீழ், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. ரசு ஒதுக்கீடுஇந்தக் கல்லுாரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, தமிழக அரசின் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளில், 50 சதவீதம், மற்ற கல்லுாரிகளில், 65 சதவீத இடங்கள், கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.இந்த கவுன்சிலிங்கை, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் அடங்கிய, அரசின் மாணவர் சேர்க்கை கமிட்டி நடத்தும்.'இந்த ஆண்டு, பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி பணிகள்உள்ளதால், அவர்களால் கவுன்சிலிங்கை நடத்த முடியாது' என, தமிழக உயர்கல்வித்துறைக்கு, துணைவேந்தர், சுரப்பா கடிதம் எழு
வேளாண்துறை படிப்புக்கு ஜீலை 1ல் நுழைவுத்தேர்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கோவை: வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு, வரும், ஜூலை, 1ல் நடக்கிறது. இந்த அரிய வாய்ப்பை தமிழக மாணவர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.வேளாண் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு, கடந்தாண்டு வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வாயிலாக நடத்தப்பட்டது. நடப்பாண்டு முதல், தேசிய நுழைவுத்தேர்வுகள் ஒருங்கிணைப்பு ஆணையமான, என்.டி.ஏ.,விடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏப்., 1 முதல் 30ம் தேதி வரை, ஆன்லை' மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம், 700 ரூபாய். எஸ்.சி.,- எஸ்.டி., - திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, 350 ரூபாய்.விண்ணப்பங்களில் பிழைகளை திருத்த, மே 7 முதல், 14 வரை, வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பிக்கும்போது, இ--மெயில்&' மற்றும் தொலைபேசி எண்களை கவனமாக பதிவு செய்ய வேண்டும்; இவற்றின்வாயிலாகவே மாணவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.வேளாண் படிப்பிற்கு, ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வு மூலம் கலந்தாய்வு நடத்தப்