Posts

Showing posts from April 19, 2022
Image
  10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் - ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!! பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது. தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களும் கடந்த மார்ச் 9ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி முடிவடைந்தன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 2
Image
  வரும் 24, 25ம் தேதி குரூப் 7ஏ தேர்வு இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல் வருகிற 24,25ம் தேதி நடைபெற உள்ள குரூப் 7ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்ட அறிவிப்பு குரூப் 7 'ஏ' பணியில் அடங்கிய செயல் அலுவலர், கிரேடு 1 பதவிகளுக்கான எழுத்து தேர்வு வருகிற 23ம் தேதி(முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 24ம் தேதி(முற்பகல் மட்டும்) நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
  டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா?- அன்புமணி கண்டனம் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்ட 5 பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது அதிர்ச்சியளிக்கிறது என்றும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியைப் புறக்கணித்துவிட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்
Image
  TNPSC Group 4: முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?  TNPSC VAO group 4 exam syllabus how to download?: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பச் செயல்முறை 30.03.2022 முதல் ஆரம்பித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022. இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் முழு சிலபஸையும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, சிலபஸை எங்கு டவுன்லோடு செய்வது, சிலபஸில் என்ன உள்ளது என்பது பற்றிய தகவல்களை இப்போது பார்ப்போம். தேர்வு முறை குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும். பாடத்திட்டம் முதல் பகுதியில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறும். இதி
Image
  தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை... விண்ணப்பங்கள் வரவேற்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!! தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க தமிழக அரசானது குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதன்படி ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் இதற்கான முழு கல்வி கட்டண செலவையும் அரசே ஏற்கிறது. மேலும் ஆண்டுதோறும் தகுதி உடைய மாணவர்களை தேர்ந்தெடுத்து, தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 % ஒதுக்கீடானது மாணவர்களுக்கு கல்வி கற்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டு தற்போதைய கல்வியாண்டுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், வருகிற 20-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்