TET ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்!!!
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை யில் இடைநிலை ஆசிரியர், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சிகட்டாயமாக்கப் பட்டு இருக்கிறது.
தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற முதலில் 90 மதிப்பெண் (150-க்கு) என்றும் பின்னர் இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து 82 மதிப்பெண் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.கடந்த ஆண்டு நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் 72 ஆயிரத் துக்கும் மேற்பேட்டோர் தேர்ச்சி பெற்றனர். 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்தது. இந்த நிலையில், ஆசிரியர் நிய மனத்துக்கு வெயிட்டேஜ் மதிப் பெண் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 பட்டதாரி ஆசிரியர்களும், தொடக்கக் கல்வித் துறைக்கு 167 பட்டதாரி ஆசிரியர்கள்,1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 1,816 பேரும் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 25-ம்தேதி பணிநியமன ஆணை வழங் கப்பட்டு, அவர்கள் பணியில் சேர்ந்துவிட்டனர்.
அடுத்ததாக, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளது.இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஆனால், அந்த சலுகையின் மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி-டெட்), எஸ்சி, எஸ்டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகிய ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்துத்தான் தமிழக அரசும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்தது. ஆனால், தற்போது, 5 சதவீத மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை.இதனால், 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், அடுத்த ஆசிரியர் நியமனத்தில், தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் மற்றும் அதற்கும் மேல் பெற்று தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுமா அல்லது 5 சதவீத மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தெரியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் குழம்பிப் போயுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணியில் மட்டும் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் 669 காலியிடங்களும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 காலியிடங்களும் நிரப்பப்படவேண்டியுள்ளது. மேலும் இந்த இரு வகை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 October 2014
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேல்நிலைப்பள்ளியில் ஒன்பது முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ஒரு தலைமை ஆசிரியர் என 10 பேர் இருக்க வேண்டும்; உயர் நிலைப்பள்ளியில் ஐந்து பட்டதாரி ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என ஆறு பேர் இருக்க வேண்டும்.
அதன்படி, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் 300 பேர், மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரம் பேர் என 1,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, உடனடியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் பணியிடம் நிரப்ப தாமதமானால், மாணவர் கல்வி நலன் பாதிக்கப்படும்; பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள் ளது. பதவி உயர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமிக்க காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு "கவுன்சிலிங்' நடத்தி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் 2.5 லட்சம் காலியிடம்’!!!
‘இன்னும் இரு ஆண்டுகளில், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில்
இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாகப் போகின்றன’ என, இலவச பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ‘பாரதி கல்வி, வேலை வாய்ப்பு’ இலவச பயிற்சி மைய துவக்க விழா, ஊட்டி ஹில்பங்க் சந்திப்பில் உள்ள சி.ஐ.டி.யு., அலுவலகத்தில், நடந்தது.
இந்த மையத்தில், பிரதி ஞாயிறு கிழமைகளில், காலை முதல் மதியம் வரை, தகுதி வாய்ந்த பயிற்றுனர்கள் மூலம், வங்கித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தகுதி தேர்வு, வி.ஏ.ஓ., உட்பட அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியை துவக்கி வைத்து, பயிற்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன இணை செயலர் மகேஷ்வரன் ஆகியோர் கூறியதாவது:
பலருக்கு, அரசுப் பணி என்பது, கானல் நீர் தான். அரசுப் பணிக்கான போட்டி தேர்வுக்கு இளைஞர்களை தயார்படுத்த, பயிற்சி வகுப்பு என்ற பெயரில் பெரும் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இது சாத்தியமில்லை என்ற நிலையில், மாநிலம் முழுக்க, 30 இலவச பயிற்சி மையங்களை ஏற்படுத்தி, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்து, இலவச பயிற்சி வழங்கி வருகிறோம்.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு துறைகள், வங்கி உட்பட பொதுத் துறை நிறுவனங்களில், வெளியூரைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பணிபுரிகின்றனர்; நீலகிரி மாவட்ட இளைஞர்களுக்கு அரசுப்பணி எளிதாக கிடைப்பதில்லை. மாநில அரசு துறைகள் மற்றும் வங்கி உட்பட பொதுத் துறை நிறுவனங்களில், அடுத்த இரு ஆண்டுகளில், 2.50 லட்சம் பேர் பணி ஓய்வு பெறவுள்ளனர்; காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஊட்டியில் நடக்கும் இலவச பயிற்சி மையத்தில், அதிகளவு இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி பெற்று, அரசுப் பணியை பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Subscribe to:
Posts (Atom)
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...