Posts

Showing posts from May 14, 2022
Image
  பள்ளிகளை முன்கூட்டியே திறக்க கல்வித்துறை திட்டம்? வரும் கல்வி ஆண்டு ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே திறப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு தவிர்த்து, மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு என்பது ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் பள்ளி கல்வி ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதனால் பள்ளிகளை முன்கூட்டியே திறப்பதற்கு கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரோனா தொற்று குறைந்து இருக்கக்கூடிய சூழலில் கால தாமதம் செய்யாமல், வழக்கம் போலவே ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து உயர் அலுவலர் ஒருவர் கூறும்போது, பள்ளி திறப்பு தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், ஓரிரு நாளில் இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Image
  தமிழகத்தில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பு... தமிழகத்தில் 76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தவரகள் அரசு வேலைக்காக தங்களது விவரங்காளை அளித்து, வேலைவாப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பார்கள். அப்படி தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 76,35,059 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண்கள் 35,67,000 பேரும், பெண்கள் 40,32,046 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 239 பேரும் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தவரகள் அரசு வேலைக்காக தங்களது விவரங்காளை அளித்து, வேலைவாப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பார்கள். அப்படி தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 76,35,059 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண்கள் 35,67,000 பேரும், பெண்கள் 40,32,046 பேரும், மூன்றாம் பாலினத்தவ
Image
  தமிழகத்தில் 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை - பள்ளி கல்வித்துறை தெரிவிப்பு! தமிழகத்தில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 26 புள்ளி 77 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1 புள்ளி 18 லட்சம் பேர் பொது தேர்வை எழுதவில்லை என பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. குழந்தை திருமணம், ITI எனப்படும் பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்துவிடுவது, கொரோனாவால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியே பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனிடையே நடப்பு கல்வியாண்டில் இடைநின்ற 1 புள்ளி 80 லட்சம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் 1 புள்ளி 18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இடைநிற்றலை குறைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
Image
  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் நிறைவு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (மே 15) நிறைவு பெறுகிறது. http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Image
  அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1000: ஜூலை 15 முதல் அமல் அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஜூலை 15- ஆம் தேதி அமலுக்கு வருகிறது எனவும், இந்தத் தொகை மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் உயா் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா்கல்வி சோக்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 அவா்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும்,
Image
  பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு : பள்ளிக்கல்வித்துறை  சென்னை:கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புமுதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நாளை 14ம் தேதி முதல் கோடைவிடுமுறை துவங்குகிறது. வரும் ஜூன் மாதம் 13 ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னான பள்ளிகள்திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Image
  வேதியியல் பாட வினாத்தாள் கடினமாக இருந்தது: 12ம் வகுப்பு மாணவர்கள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற வேதியியல் பாடத்திற்கான வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 பேர் எழுதி வருகிறார்கள். நேற்று வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் வேதியியல் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர். 2 மற்றும் 3 மதிப்பெண்களுக்கான வினாக்களில் எதிர்பார்க்காத பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாகவும், குறிப்பாக 3வது திருப்புதல் தேர்வு நடத்தப்படாத நிலையில், அந்த திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருந்து கட்டாயமாக பதில் அளிக்கக்கூடிய பகுதிகளில் வினாக்கள் அமைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த தமிழ், ஆங்கிலம் பொதுத்தேர்வு வினாத்தாள்கள், நடத்தி முடிக்கப்பட்ட 2 திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே அமைந்து இருந்தத