Posts

Showing posts from May 27, 2016
தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ல.குமார் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் அரசு மறறும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலின் காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் துவங்கும் நாள் ஜூன் 6-ம் தேதி (திங்கள்கிழமை) ஆக மாற்றி அறிவிக்கப்படுகிறது. மேலும் இடைப்பட்ட இவ்விடுமுறை நாள்களில் பள்ளிகளில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என குமார் எச்சரித்துள்ளார்.
TET தேர்வு இரண்டு ஆண்டுகளாக இல்லை: மாணவர்கள் பாதிப்பு தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால், பி.எட்., முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டாய கல்விச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், தனியார்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்  தகுதி தேர்வு (டி.இ.டி.,) கட்டாயம் ஆக்கப்பட்டுஉள்ளது. தமிழக அரசு கடந்த 2012,13 ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியுள்ளது. 2014, 15ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடக்கவில்லை. இதனால் பி.எட்., படித்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டிலாவது டி.இ.டி., தேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில், “ பி.எட்., முடித்த ஆயிரக்கணக்கான இடைநிலை, பட்டதாரி  ஆசிரியர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் ஜெ.,க்கு கடிதம் அனுப்பிஉள்ளோம்,” என்றார்.