Posts

Showing posts from July 7, 2013
100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு சென்னை: மாநிலம் முழுவதும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் அறிவிப்பு: கடந்த மே, 15ம் தேதி, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, கல்வித் துறை சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டார். "50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்படும்' என, முதல்வர் அறிவித்தார். ஆனால், பள்ளிகள் திறந்து, ஒரு மாதம் கடந்த நிலையிலும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல், வெளியாகாத நிலை இருந்தது. இதனால், மேல்நிலை வகுப்புகளில், மாணவர் சேர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டது. தற்போது, மாணவர் சேர்க்கைக்கு வசதியாக,100 உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு முதல் நான்கு வரை... சென்னை மாவட்டம் தவிர்த்து, இதர மாவட்டங்களில், 100 பள்ளிகளும், தரம் உயர்த்தப்பட்டு