Posts

Showing posts from August 5, 2022
Image
  முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First generation graduate certificate) பெறுவது எப்படி? தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும், மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது. கடந்த 2010 ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணை பிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. அந்த அரசாணையில், ‘அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையெனில் எந்தச் சாதிபாகுபாடுமின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது. அதாவது அந்த மாணவ-மாணவியின் ‘டியூஷன் ஃபீஸ்’ எனப்படும் கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்தும்.  உதாரணத்திற்கு, சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கான ஆண்டுக் கட்டணம் இரண்டரை லட்சம் ரூபாய் என்
Image
  TNEA 2022: சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது! இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த, 1.69 லட்சம் மாணவர்களின் சான்றிதழ் விபரங்கள், சரிபார்க்கப்பட்டு வருகின்றன. சான்றிதழ் பதிவேற்றத்தில் தவறு உள்ளவர்கள், உரிய திருத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் 'ஆன்லைன்' கவுன்சிலிங்குக்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு, 2.11 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில், 1.69 லட்சம் பேர் மட்டுமே, விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களில் விளையாட்டு பிரிவில் ஒதுக்கீடு கேட்டுள்ள, 3,000 பேரின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அதே நேரம், விண்ணப்பித்த 1.69 லட்சம் பேருக்குமான, கல்வி, ஜாதி, வருமானம் மற்றும் பிற சான்றிதழ்கள், 'ஆன்லைன்' முறையிலேயே சரிபார்க்கப்படுகின்றன. மூன்று நாட்களாக நடக்கும் இந்த பணியில், சான்றிதழ்கள் ஏதேனும் விடுபட்டுள்ளதா, சான்றிதழ் பதிவில் தவறுகள் உள்ளதா என, சரிபார்க்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக, கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்
Image
  CUET UG 2022 நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: காரணம்? பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET)-UG இன் இரண்டாவது ஷிப்ட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது... ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை, அதாவது நேற்று நடத்த திட்டமிடப்பட்ட பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் இரண்டாவது ஷிப்ட் அனைத்து மையங்களிலும் ரத்து செய்யப்பட்டது என்றும், நுழைவுத்தேர்வின் முதல் ஷிப்ட் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 17 மாநிலங்களில் உள்ள சில மையங்களில் ஒத்திவைக்கப்பட்டது என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். "பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால், 17 மாநிலங்களில் உள்ள ஒரு சில தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி (முதல் ஷிப்ட்) திட்டமிடப்பட்ட CUET (UG) 2022 நுழைவுத்தேர்வுஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது," என்று தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குனர் சாதனா பராஷர் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப காரணங்களால், CUET-UG நுழைவுத் தேர்வின் இரண்டாம் ஷிப்டுக்கான வினாத்தாளை மாலை 5 ம
Image
  புதுச்சேரி பல்கலை மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி: 3,700 இடங்களுக்கு 3.86 லட்சம் விண்ணப்பம்! புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் 3,700 சீட்டுகளுக்கு, இந்தாண்டு 3.86 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். எனவே, சீட்டுகளைஅதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., படிப்புகளில், 115க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.  இந்தப் படிப்புகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம், அகில இந்திய அளவில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தி வந்தது.'கியூட்' நுழைவுத்தேர்வு இந்தாண்டு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான 10 படிப்புகளுக்கு மட்டும் மத்திய பல்கலைக் கழகங்களுக்கான 'கியூட்' நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு, விண்ணப்பம் பெறப்பட்டது. பின்னர், மற்ற முதுநிலை படிப்புகளுக்கும் கியூட் தேர்வு மூலமே சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நாடு முழுவதும் இருந்து மாணவ மாணவியர் போட்டி போட்டிக் கொண்டு விண்ணப்பித்தனர்.பல்கலைக் கழகத
Image
  முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2,207லிருந்து 3,237 ஆக அதிகரிப்பு. அறிவித்தது டி.ஆர்.பி!! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,237 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உயர் கல்வித்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது. 2020- 21ஆம் ஆண்டுக்கான அறிவிப்பில் தமிழ் - 271, ஆங்கிலம் - 192, கணிதவியல் - 114, இயற்பியல் - 97, வேதியியல் - 191,விலங்கியல் - 109,தாவரவியல் - 92, பொருளாதாரவியல் - 289, வணிகவியல் - 313, வரலாறு - 115, புவியியல் - 12, அரசியல் அறிவியல் - 14, வீட்டு அறிவியல் - 3, இந்திய கலாச்சாரம் - 3, உயிர் வேதியியல் -1, உடற்கல்வி இயக்குநர் ( நிலை1) - 39, கணினி பயிற்றுவிப்பாளர் - 44 என பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வெளியானது. கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், ப
Image
  இன்று முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று முதல் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். கல்லூரி கல்வி இயக்ககம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்த மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெற உள்ளதாகக் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Image
  ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு நடுநிலைப் பள்ளியிலும் பயிற்சி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் படித்து பயிற்சி பெறுவதற்கு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அருகில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கும் அனுப்பலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. : பி.எட் மற்றும் எம்எட், பிஎச்டி பட்டப்படிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழம் வழங்கி வருகிறது. ஆசிரியர் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நாட்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. பள்ளிக்கல்வித்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் 24 மாவட்டங்களில் 2,200 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், பி.எட் மற்றும் எம்எட் படிக்கும்