27 November 2022

 TNPSC குரூப் 4 தேர்வு; தோராய கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? - வெளியான அப்டேட்



டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.


குரூப்-4 கட் ஆஃப் எவ்வளவு நிர்ணயமாக வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.


முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட்டது. 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில், 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சுமார் 3.5 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, தேர்வாணையம் வெளியிட்ட உத்தேச கால அட்டவணையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


 இருப்பினும், அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனால், ஏற்பட்ட கால தாமதம் காரணமாக குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதட்தில் வெளியிடப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துளளது.



கட் ஆஃப் மதிப்பெண்கள்:


டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. பகுதி 'அ '-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி 'ஆ' வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன.


முந்தைய, குரூப் 4 தேர்வுகளில், கட்டாய மொழிப் பாடங்களில் தமிழ் (அ) ஆங்கிலம் என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை தமிழ் மொழி மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது.


எனவே, முந்தையை காலங்களில் ஆங்கில பாடங்களில் குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வந்த தேர்வர்களுக்கு இம்முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சற்று கடினமாகவே இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு சாதகமான போக்கை ஒட்டுமொத்தமாக மாற்றலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வர்கள் குரூப் 1 மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கும் சேர்த்து தயாராகி வருவதால், குரூப் 4 தேர்வில் தமிழை விட ஆங்கில பாடத்தையே அதிகம் தேர்ந்தெடுத்து வந்தனர். அதன்படி, முந்தைய காலங்களில் அதிகபட்ச உயர்கல்வியை முடித்தவர்களே குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று வந்தனர்.


உதாரணமாக, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் இளநிலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 13,919 ஆகவும், முதுநிலை மாணவர்களின் எண்ணிக்கை 4,903 ஆகவும் உள்ளன. அதே சமயம், 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 339 ஆக மட்டுமே உள்ளது.


எனவே, தமிழ் பாடத்த்தைப் பொறுத்த வரையில் 90 முதல் 95 வரை மதிப்பெண்கள் பெறும் தேர்வர்கள் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலில் நல்ல இடத்தை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்தபடியாக, இந்தாண்டு குரூப் 4 பொது அறிவு வினாக்களுமே விளிம்பு நிலை தேர்வர்களுக்கான சாதகமான சூழலை ஏறடுத்திக் கொடுத்துள்ளது. பொது அறிவு வினாக்கள் குரூப் 4 தேர்வுக்கு மட்டுமே தாயாராகி வரும் தேர்வர்களுக்கு சாதகமாக இருந்ததாக கூறப்படுகுறிது. குரூப் 1, 2 மற்றும் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு சாதாகமான கேள்விகள் முற்றிலும் இடம் பெறவில்லை.


எனவே, விடாமுயற்சியுடன் குரூப் 4 தேர்வுக்கு மட்டுமே தயாராகி வரும் தேர்வர்கள் குறைந்தது 40-50 முதலான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணித பாடத்தில், எளிமையாக 20 கேள்களுக்கு மேல் சரியான பதில் அளித்திருக்க முடியும்.


எனவே, பொது பிரிவினர் 175 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 170 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , மிகவும் பிற்படுத்தப்பட வகுப்பினர் 168(கூடவோ/குறையவோ செய்யலாம்) , பட்டியலின வகுப்பினர் 160(கூடவோ/குறையவோ செய்யலாம்) , பழங்குடியினர் 155 (கூடவோ/குறையவோ செய்யலாம்) கேள்விகளுக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

 2ம் நிலை காவலர் பணித் தேர்வு: 67,000 பேர் ஆப்சென்ட்



தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்துள்ளது


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு துறை காவலர்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 3552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.


தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை , புதுக்கோட்டை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 3 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.


சென்னையை பொறுத்தவரை கே.கே நகர், ராமாபுரம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், வேளச்சேரி , அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் கல்லூரிகள் என 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வை எழுதினர்.


அந்த வகையில் சென்னை புரசைவாக்கம் அழகப்பா பள்ளியில் 500 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 250 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணிக்கு துவங்கிய இந்த தேர்வானது மதியம் 12.40 வரை நடந்தது.


அந்த வகையில் தமிழகத்தில் இந்த சீருடை பணியாளர் தேர்வின் மூலம் ஆயுதப் படை, சிறப்பு காவல் படைமற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்கள் , தீயணைப்பாளர்கள் என மொத்தமாக 3552 பணியிடத்துக்கு 3.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுகளை எழுதினர். இதில் 2.99 , 887 பேர் ஆண்கள், 66,811 பேர் பெண்கள், 59 பேர் மூன்றாம் பாலினத்தவர் என தேர்வை எழுதினர்.


தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களை காவல் துறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். தேர்வு எழுத விதிமுறைகள் இருப்பதாலும், செல் போன், வாட்ச், சீப்பு, மொபைல் போன் போன்ற பொருட்கள் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை என்பதாலும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர்.


தேர்வுக்கு விண்ணப்பித்த 3. 66 லட்சம் பேரில் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

  TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 3,935 காலிப்...