Posts

Showing posts from December 19, 2016
பிளஸ் 2 பொதுத்தேர்வு :தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் 'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், இன்று முதல் வரும், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு சென்று, இன்று முதல் வரும், 24 வரை விண்ணப்பிக்கலாம்.  மேலும் விபரங்களை, அரசு தேர்வுத்துறையின், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Image
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு : கூடுதல் விடுமுறை  'பிளஸ் 2வுக்கு, மார்ச் 2 முதல், 31 வரையும்; 10ம் வகுப்புக்கு, மார்ச் 8 முதல், 30 வரையும், பொதுத் தேர்வுகள் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு, மார்ச் மாதத்திலும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் இரண்டாவது வாரம் வரையும் நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, இரண்டு வகுப்புகளுக்கும், மார்ச்சிலேயே பொதுத்தேர்வு முடிகிறது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்து, முடிவுகள் வெளிவரும் வரை, 50 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.