Posts

Showing posts from September 27, 2014
ஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்    தற்போதுTET-தேர்வில் இடஒதுக்கீட்டில் 5%மதிப்பெண் தளர்வு அளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்தநிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 5%மதிப்பெண் தளர்வு அளித்தது தவறு என்று அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  ஆனால் இந்த 5%மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாம் என்றும் இனிவரும் காலங்களில் இந்த 5%மதிப்பெண் வழங்கக்கூடாது என்றும் 5%மதிப்பெண் தளர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.  ஆனால் 652 கணினி ஆசிரியர்கள் விஷயத்தில் TRB நடத்திய தேர்வில் 50%மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு பணிவழங்கப்படும் என்று அரசுஉத்தரவிட்டது.தேர்வு நடந்து முடிந்த பின்பு அரசு 50%இலக்கை மாற்றி 15%தளர்வுகொடுத்து 35%எடுத்தால் போதுமானது என்று கருதி அரசு தெரிவித்தது.  இதனடிப்படையில் TRB தேர்வு முடிவை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தன் தீர்ப்பை வெளியிட்டது. தீர்ப்பில் 35% சதவீதமாக அரசு குறைத்தது தவறு.இதனால் 35%மேலும் 50% குறைவாகவும் மதிப்பெண் எடுத்தவர்கள் பணிநீக்கம் செய்ய
தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளுக்குடி.ஆர்.பி., மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்  தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என ஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வி துறை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார்.  இந்த பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை ரத்து: அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்   ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் சலுகை செல்லாது என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.  இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைப்பதால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை.  ஆசிரியர் தகுதித் தேர்வை அறிமுகம் செய்வதற்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளனர். தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயம்