Posts

Showing posts from March 14, 2015
10-லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு 1 மாதத்திற்குள் வெளியிடப்படும் அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் தகவல் 10லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு 1 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். குரூப்-4 தேர்வு முடிவு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் 21-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு எப்போது வெளிவரும் என்று நன்றாக தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். எனவே இந்த தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்வு வைத்து ஆட்களை தேர்ந்து எடுத்து கொடுத்து வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு முடிவு இன்னும் 1 மாதத்திற்குள் வெளியிடப்படும். உதவி சித்த மருத்துவ அதிகார
சிறப்பு ஆசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான முதல் கட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும். போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவர். மொத்தம் 95 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் 190 "அப்ஜெக்டிவ் டைப்' வினாக்கள் இடம்பெற்றிருக்கும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு இந்தத் தேர்வுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும். பெரும்பாலும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் போட்டித் தேர்வு நடைபெறும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்