15 January 2014

டி.என்.பி.எஸ்.சி., மூலம் 4,000 பேர் தேர்வு செய்யபடவுள்ளனர்.

தமிழகத்தில் அரசு துறைகளில், இந்தாண்டு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 , வி.ஏ.ஓ.,உள்ளிட்ட பல தேர்வுகள் மூலம் 4,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்கிறது. சில தேர்வுகளுக்கு எழுத்து தேர்வு மூலமும், சிலவற்றுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

ஓர் ஆண்டில், என்னென்ன பதவிகள், தேர்வுகள், எந்ததேதிகளில் நடக்கிறது; எப்போது ரிசல்ட் அறிவிக்கப்படுகிறது; நேர்காணல் எப்போது உள்ளிட்ட முழு விவரங்களுடன் கூடிய ஆண்டு தேர்வு கால அட்டவணையை, 2012ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி.,தலைவராக இருந்த நட்ராஜ் அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து ஆண்டுதோறும், இதுபோன்ற கால அட்டவணை வெளியிடப்படுகிறது. 

இந்நிலையில், 2014ம் ஆண்டுக்கான கால அட்டவணையை ஜன.,10ம் தேதி,டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் வெளியிட்டார். மொத்தம் 23 வகையான தேர்வுகள் இந்தாண்டு நடத்தப்படவுள்ளன. இதில் அதிகபட்சமாக வி.ஏ.ஓ., பணிக்கு, 2,342 பேரும், குரூப் 2 (நேர்காணல்இல்லாதது) பணிக்கு 1,181 பேரும், ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுக்கு 98 பேரும்,தேர்வு செய்யப்படுகின்றனர். 

இது தவிர குரூப்-2 (நேர்காணல்) தேர்வு, குரூப்-4 தேர்வு ஆகியவையும்அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் காலியிடங்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களும் தோராயமானவை; அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்தாண்டு டி.என்.பி.எஸ்.சி., மூலம் 4,000 பேர் தேர்வு செய்யபடவுள்ளனர். இது போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலைவாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகள் அரசு அறிவிப்பு 

தமிழ்நாட்டில் உள்ள பல படிப்புகளுக்கு சமமான படிப்புகளை அரசு அறிவித்துள்ளது. சமமான படிப்புகள்தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கு சில பட்டங்களை பெற்றவர்கள் வேலைவாய்ப்பிலும் சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த படிப்பு மற்ற பல்கலைக்கழகத்தில் உள்ள பட்ட படிப்புக்கு சமமானதா என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் படித்த பட்டதாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

அவர்களின் நலன் கருதி தமிழக உயர் கல்வித்துறை ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;- 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்ட எம்.எஸ்சி. அப்ளைடு புவியியல் பட்டம், எம்.எஸ்சி. புவியியல் பட்டத்திற்கு சமம். 

திருச்சியில் உள்ள ஹோலிகிராஸ் சுயாட்சி கல்லூரியில் படித்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பி.எஸ்சி. விலங்கியல் (உயிரி தொழில்நுட்பத்தில் சிறப்பு) பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்ற பி.எஸ்சி. விலங்கியல் பட்டத்திற்கு சமமானதாகும். 

கோவாவில் வழங்கப்படும் எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேசன் பட்டய படிப்பு, தமிழ்நாட்டில் வழங்கப்படும் எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேசன் பட்டயப்படிப்புக்கு சமமானதாகும். 

பி.ஏ. ஆங்கிலம் பாரதி தாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பி.ஏ. இங்கிலீசுடன் ஸ்பெஷலைசேஷன் இன் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிப்பு பி.ஏ. ஆங்கில படிப்புக்கு சமமானதாகும். 

சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.ஏ. வரலாற்று கல்வி படிப்பு, எம்.ஏ. வரலாறு படிப்பு சமமானதாகும். பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பி.எஸ்சி. கணிதம் ஸ்பெஷலைசேஷன் இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற படிப்பும் பி.எஸ்சி. கணிதம் படிப்பும் சமம். 

பி.ஏ. பொருளாதர படிப்புக்கு, பி.ஏ. பொருளாதாரம் மற்றும் ஸ்பெஷலைசேஷன் இன் ரூரல் மேனேஜ்மெண்ட் படிப்பு சமம்.

 சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.எஸ்சி.பிளாண்ட் சயின்ஸ் படிப்பு, எம்.எஸ்சி. தாவரவியல் படிப்புக்கு சமம். 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய பி.எஸ்சி. அப்ளைடு விலங்கியல் படிப்பு, பி.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு சமம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பி.எஸ்சி. பிஸிக்ஸ் வித் ஸ்பெஷலைசேஷன் இன் எலக்ட்ரானிக்ஸ் படிப்பும் பி.எஸ்சி. பிஸிக்ஸ் படிப்புக்கு சமம். 

சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.காம் (டிரேடு அண்ட் சர்வீஸ்), எம்.காம் (பிஸினஸ் சிஸ்டம்), எம்.காம். ( டிரேடு அண்ட் டெவலப்மெண்ட்), எம்.காம் (இன்டர்நேஷனல் பிசினஸ்), எம்.காம் (இன்டர்நேஷனல் பிசினஸ் அண்ட் பைனான்ஸ்), எம்.காம் (அக்கவுண்டிங் பைனான்ஸ்) ஆகிய அனைத்து படிப்புகளும் எம்.காம். படிப்புக்கு சமம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...