Posts

Showing posts from October 23, 2013
1,000 பேர்களை பணிக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அடுத்த கட்டமாக அறிவிக்கிறது சென்னை 1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்–1 தேர்வு. குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு, மற்றும் அரசு துறைகளுக்கான என்ஜினீயர்களை தேர்ந்து எடுக்கும் தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.  குரூப்–1 மெயின் தேர்வு வருகிற 25, 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறுகிறது. குருப்–1 தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பலர் பணிபுரிந்து பின்னர் 10 வருடத்திற்குள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகி விடுவார்கள். முன்பை விட இப்போது அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத படித்த இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. காரணம் அந்த அளவுக்கு படித்து முடித்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.   தற்போது குரூப்–2 இரண்டு வகைப்படும். குரூப்–2 என்பது எழுத்துதேர்வுடன் நேர்முகத்தேர்வும் கொண்டது. ந
சான்றிதழ் சரிபார்ப்பில் நிறைய பேர் ஆப்சென்ட்?  தமிழகம் முழுவதும், 14 மையங்களில், நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில், அதிகமானோர், "ஆப்சென்ட்" ஆனதாக கூறப்படுகிறது.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், நேற்று நடந்தது. இதற்கு, 72 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 70 பேர் மட்டும் பங்கேற்றனர். 70 பேரும், உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.  இன்று நடக்கும் சரிபார்ப்பிற்கு, 70 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், இதர 13 மையங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், அதிகமான தேர்வர்கள்,"ஆப்சென்ட்" ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பணிக்கு, ஒருவர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்ததால், இதில், பங்கேற்காதவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என, ஏற்கனவே, டி.ஆர்.பி., திட்டவட்டமாக அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு, ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மனு-Dinakaran   மதுரை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சூரியா. மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) தகுதித் தேர்வை கடந்த 14.10.2012ல் எழுதினேன். எனக்கு ‘பி’ வரிசையில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதில் பாடத்திட்டத்தில் இல்லாத பல கேள்விகள் கேட்கப்பட்டன.தேர்வாணைய வெப்சைட்டில் பதில்கள் வெளியிடப்பட்டன. இதில் 9 கேள்விக்கான பதில்கள் தவறாக உள்ளது.  இதன் காரணமாக எனக்கு போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. 90 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. தவறான கேள்விக்கான மதிப்பெண்களை எனக்கு வழங்கினால் நான் 95 மதிப்பெண் பெற்று தேர்வாகும் வாய்ப்பு உள்ளது. எனவே தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.   இந்த மனு நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து ஆசிரியர் தேர்வாணைய தலைவர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு தேனி மாவட்டத்தில் தற் காலிக முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண் ணப்பம் அளிக்க முதுகலை பட்டதாரிகளிடம் ஆர் வம் இல்லாததால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப் பட்டு உள்ளது.   தற்காலிக ஆசிரியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அனு மதி அளித்து உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் சம்பளம் வழங் கப்படுகிறது. இந்த சம்பளம் பெற்றோர் ஆசிரியர் கழக த்தின் நிதியில் இருந்து அரசு பெற்று தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்குகிறது. இந்த தற்காலிக ஆசிரியர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே நியமனம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.   விண்ணப்பிக்க ஆர்வம் இல்லை தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கிலம், கணி தம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங் களுக்கு தலா ஒரு ஆசிரியரும், வேதியியல் பாடத்திற்கு 2 பேர், வணிகவியல் பாடத்திற்கு 5 பேர், பொருளியல் பாடத்
2,276 பேருக்கு பதில், 1.6 லட்சம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்க்க முடிவு: இப்போதைக்கு வராது முதுகலை ஆசிரியர் தேர்வுப பட்டியல்-Dinamalar ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது. இதனால், இறுதி தேர்வுப் பட்டியல், இப்போதைக்கு வராது என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.   அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வு நடந்தது. அடுத்தடுத்த பணிகளை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக கூறி, ஐகோர்ட், மதுரை கிளையில், ஒரு தேர்வர், வழக்கு தொடர்ந்தார். தமிழ் பாடத்திற்கு, மறு தேர்வை நடத்த, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறு தேர்வை நடத்துவதா, அல்லது கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறைய