27 December 2022

 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கூறிய போராடிய 300 பட்டதாரி ஆசிரியர்களை கைது செய்த தி.மு.க அரசு



காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க கோரி சென்னையில் போராட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.



பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் நேற்று போராட்டம். நடந்தது பல்வேறு மாவட்டங்களில் இருந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், வேலை கேட்டு போராடிய அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ரத்தினகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது, 'கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதவி நியமனம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 2000 பி.எட் மற்றும் 1500 டி.டி.எட் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் உடனடியாக வயது வரம்பின்றி கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.


கடந்த 2010 ஆகஸ்ட் 23'க்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் அல்லது பணி நியமன வேலை துவங்கியிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு என்ற அறிவிப்பை பின்பற்ற வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன தி.மு.க அரசு கோரிக்கை நிறைவேற்றாமல் உள்ளதால் முற்றுகை போராட்டம் நடத்துகிறோம்' என கூறினார்.

 குரூப்-4: மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு!




குரூப் - 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே, 7301 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 


கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் -4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். எனவே, இதன் முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளது. ஜூலையில் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 23-08-2010 முன்பு NCTE விதிப்படி விலக்கு பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்கள் டி.பி.ஐ., வளாகம் முற்றுகை 300க்கும் மேற்பட்டோர் கைது




காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்திய, 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.


பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


தகுதித்தேர்வில் விலக்கு


போராட்டம் குறித்து, தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ரத்தினகுமார் அளித்த பேட்டி: 


கடந்த, 2010ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பணி நியமனம் பெற்றவர்கள் போக, மீதமுள்ள, 2,000 பி.எட்., மற்றும் 1,500 டி.டி.எட்., இடைநிலை ஆசிரியர்களுக்கு, தற்போதுள்ள காலி பணியிடங்களில், உடனடியாக வயது வரம்பின்றி காலமுறை ஊதியத்தில், பணி நியமனம் செய்ய வேண்டும். 


கடந்த 2010 ஆக., 23க்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலை துவங்கி இருந்தால், ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு என்ற அறிவிப்பை பின்பற்ற வேண்டும். 


போராட்டம்


அரசாணை எண், 153ல் உள்ள, 1,743 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஏற்கனவே, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை பின்பற்றி, இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, தொடர்ந்து போராடி வருகிறோம்.


தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளதால், முற்றுகை போராட்டம் நடத்துகிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

  ஒரே நாளில் 1,231 நர்ஸ்கள் பணி நியமனம்.. மேலும், 2417 காலி பணியிடம் நிரப்பப்படும் - முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம்...