Posts

Showing posts from May 27, 2023
Image
  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!!!!! சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் நவநீதன் தலைமையில் தமிழக அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ராஜ்குமார், ஆலோசகர் அரியாத்தி, மாநில துணைத்தலைவர் உடையார், மாவட்ட செயலாளர் அங்காள ஈஸ்வரி, பொருளாளர் கவிதா, ஒன்றிய தலைவர்கள் சத்யன் அமுதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜீவா ராஜாத்தி, ஜோஸ்பின் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய செயலாளர் செல்லம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை இணைத்து சத்துணவு பணியாளர் மூலம் செயல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Image
  வாக்குறுதி 181 என்ன ஆனது? தொடர்கதை ஆகும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்.. திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர பணி செய்யும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகியவை வழங்கப்படும் என்று தன்னுடைய வாக்குறுதியாக திமுக 181 இல் குறிப்பிட்டு இருந்தது. அந்த வாக்குறுதி என்ன ஆனது? தங்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டிஜிபி வளாகத்தில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த ஒரு ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் தான் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக ஆசிரியர்கள் தமிழகத்தில் தங்களுடைய உரிமைக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.  தமிழகத்தில் தமிழ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு விடியல் தருவோம் என்பது போன்று விளம்பர வாக்குறுதிகளை எல்லாம் அளித்துவிட்டு, தற்பொழுது ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய ஒரு சூழ்நிலையை தான் தற்போது உருவாக்கி இருக்கிறார்கள்.   பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று காலவரையற்ற உண்ணா