15 May 2022

 RTE - இலவச எல்.கே.ஜி.,க்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்




 தமிழக அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து வகை சுயநிதி பள்ளிகளிலும், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இடங்களை, அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும்.


இந்த இடங்களில், ஏழை மாணவர்கள், கல்வி கட்டணமின்றி சேர்க்கப்படுவர். அவர்களுக்கான கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமின்றி, அதே பள்ளியில் படிக்கலாம்.


நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, ஏப்., 20ல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது; வரும், 18ம் தேதி முடிகிறது. மாநிலம் முழுதும், 1.30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு, இதுவரை ஒரு லட்சம் பேர் வரை பதிவு செய்து உள்ளனர்.

 குரூப் 2 மாதிரி தேர்வு 21ம் தேதி நடைபெறும்



விழுப்புரம்-விழுப்புரத்தில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடந்தது.குரூப் 2 தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம்
அறிவித்துள்ளது.


அதனையொட்டி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடந்தது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த 265 பேர் தேர்வு எழுதினர்.

 NEET 2022: விண்ணப்பிக்க கடைசி நாள்; இந்த ஆண்டு நீட் தேர்வில் முக்கிய மாற்றங்களை தெரிஞ்சுக்கோங்க!



மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.


கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது தொடங்கியது. இதுவரை சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும். இன்று இரவு 11.50 மணிக்குள் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்வில் உச்ச வயது வரம்பில் மாற்றம் கொண்டு வந்தது மட்டுமின்றி, பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை இங்கே காணலாம்.


வயது வரம்பு இல்லை


நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான உச்ச வயது வரம்பை அரசு நீக்கியுள்ளது. முன்னதாக, நீட் தேர்வில் கலந்துகொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 25 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30ஆகவும் இருந்தது. தற்போது வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், மருத்துவ நுழைவு தேர்வில் இந்தாண்டு போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது.


கேள்வியில் சாய்ஸ்


இம்முறை தேர்வர்களுக்கு கேள்விகளில் சாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 45 கேள்விகளுக்குப் பதிலாக, இந்தாண்டு விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும். மாணவர்கள், அதில் ஏதெனும் 5 கேள்விகள் தவிர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கொரோனா காரணமாக பல பள்ளி வாரியங்கள் பாடத்திட்டங்களை குறைத்தததன் காரணமாக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இது, கடந்தாண்டு முதல் அமலில் உள்ளது.


தேர்வு நேரம் நீட்டிப்பு


NEET UG தேர்வை முடிக்க விண்ணப்பதாரர்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது. 180 கேள்விகளின் எண்ணிக்கை அப்படியே இருந்தாலும், கடந்த ஆண்டு 3 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது, இம்முறை கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வானது 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும்.


தேதி மாற்றம்


நீட் தேர்வு ஆண்டுதோறம் மே மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா காரணாக கடந்த 2 ஆண்டுகளாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது, ஆனால் இந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி நடத்தப்படுகிறது. முன்கூட்டிய தேர்வு, கல்விச் செயல்பாடுகள் தாமதமாகாமல் இருப்பதை உறுதி செய்யும்


அரசு கட்டணத்தில் தனியார் மருத்துவ படிப்பு


தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளின் கட்டணத்தில், 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.


புதிய தேர்வு மையங்கள்


என்டிஏ நீட் தேர்வை 543 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்துகிறது. கடந்தாண்டுடன் 202 நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. கூடுதலாக, இந்தியாவிற்கு வெளியே 14 தேர்வு மையங்களையும் புதிதாக அமைத்துள்ளது.


NEET-UG தேர்வு ஆங்கிலம், இந்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடைபெறுகிறது.

 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில். இந்திய தபால் துறையில் வேலை..!




இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி: Gramin Dak Sevaks (GDS).

காலி பணியிடங்கள்: 4,310

சம்பளம்: ரூ.12,000

கல்வித்தகுதி: 10th

வயது: 18-40

தேர்வு: தகுதி பட்டியல்

விண்ணப்ப கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 5


மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://indiapostgdsonline.gov.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.

 TNPSC Exam: நெருங்கிய குரூப்-2; கடைசி நேர தயாரிப்பு இப்படி இருக்கணும்!




TNPSC group 2 exam last minute preparation tips for aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வரும் சனிக்கிழமை (மே 21) நடைபெற உள்ள நிலையில், கடைசி நேர தயாரிப்பு மூலம் தேர்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை இப்போது பார்ப்போம்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 5529 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வை வரும் மே 21 ஆம் தேதி நடத்துகிறது. குரூப் தேர்வில் தற்போது முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. முதல் நிலைத் தேர்வு தகுதி தேர்வு என்றாலும், 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதால், போட்டி கடுமையாக இருக்கும். எனவே என்னதான் கஷ்டப்பட்டு இதுவரை படித்திருந்தாலும், கடைசி நேரத்தில் எவ்வாறு படிக்க வேண்டும், தேர்வில் எப்படி செயல்பட வேண்டும் என தெரியாமல் பலர் கோட்டை விட்டு வருகின்றனர். எனவே கடைசி கட்ட தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என இப்போது பார்ப்போம்.


தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடத்திலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். இந்த பகுதி எளிமையானது மற்றும் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடியது. எனவே, நீங்கள் ஏற்கனவே நன்றாக படித்திருந்தாலும், திருப்புதல் என்பது முக்கியமானது, ஏனெனில் சிலபஸூக்கு ஏற்றவாறு படித்தவற்றை திருப்பி பார்க்காமல் போனால், தேர்வில் குழப்பம் ஏற்பட்டு தவறாக விடையளிக்க வாய்ப்பு உண்டு. எனவே இந்த பகுதிகளை தினமும் கண்டிப்பாக திருப்பி படித்து வர வேண்டும்.


இதேபோல், திறனறி வினாக்கள் மற்றும் கணித வினாக்களை தினமும் பயிற்சி செய்ய வேண்டும். மேலும் தினமும், ஒரு மாத நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும். கூடுதலாக பொது அறிவு பகுதிக்கு, சிலபஸில் கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு பாடத்தை திருப்பி படித்து வர வேண்டும். இதில் 8 (தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு) மற்றும் 9 (தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம்) ஆம் அலகுகளுக்கு (யூனிட்) கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அடுத்ததாக அரசியலமைப்பு மற்றும் இந்திய தேசிய இயக்கம் பாடங்களை படிக்க வேண்டும்.


ரிவிஷன் செய்வதற்கு ஏற்ற முறை குரூப் ஸ்டெடி (கூட்டாக படிப்பது) தான். எனவே முடிந்தவரை நன்றாக படிக்க கூடியவர்களுடன் சேர்ந்து ரிவிஷன் செய்வது சிறந்தது. ரிவிஷன் செய்யும்போது வரி, வரியாக படிக்க கூடாது, நீங்கள் ஏற்கனவே படித்துள்ளதால், முக்கியமானவற்றை மட்டும் படிக்க வேண்டும். அதிலும் தரவுகளாக படிக்க வேண்டும். அதேநேரம், உங்களுக்கு நன்றாக தெரிந்த தரவுகளை படிக்காமல், உங்கள் நினைவில் இல்லாத தரவுகளாக தேடித் தேடி படிக்க வேண்டும்.


சிலபஸ் முழுவதையும் கவர் செய்து விட்டோமா என்பதை கடைசி இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை இனிமேல் புதிதாக எதையும் படிக்க வேண்டும். ஏற்கனவே படித்ததை சரியாக திருப்பி படித்துக் கொள்ளுங்கள். கணித பகுதிகளை தினமும் படிக்காமல், பயிற்சி செய்து பாருங்கள். தினமும் ஒரு மாத நடப்பு நிகழ்வுகளை படித்துக் கொள்ளுங்கள்.


இவ்வாறு படித்தால், நீங்கள் இதுவரை படித்தது உங்கள் நினைவுக்கு வருவதோடு, தேர்வில் குழப்பமில்லாமல் விடையளிக்க முடியும். எனவே இருக்கின்ற குறைவான நாட்களை பயனுள்ள நாட்களாக மாற்றி தேர்வுக்கு முழுவீச்சில் தயாராகுங்கள். தேர்வில் சிறப்பாக செயல்பட்டு முதன்மை தேர்வுக்கு தேர்வாகுங்கள்.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...