29 July 2017
1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கல்வி தகுதியை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி, கல்வித்தகுதியை திருத்தி அறிவிக்கை வெளியிட தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே 1,058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிக்கை 28-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 11-ந்தேதி ஆகும். ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் தற்போது புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அறிவிக்கையின்படி, எழுத்து தேர்வு செப்டம்பர் 16-ந்தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...