Posts

Showing posts from March 19, 2016
பிளஸ் 2 கணித தேர்வு; புதிய கேள்விகளால் மாணவர்கள் குழப்பம் பிளஸ் 2 கணித தேர்வில், சில புதிய கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் குழப்பமடைந்தனர்; நீண்ட பதிலளிக்க வேண்டிய கேள்விகளால், நேரமின்றி தவித்தனர். பிளஸ்  2  பொதுத்தேர்வில் ,  நேற்று கணித தேர்வு நடந்தது. வினாத்தாளில் ,  ஆறு மதிப்பெண்ணுக்கான கட்டாய கேள்விகளில் , 46, 47, 52  மற்றும் , 55 ம் எண் கேள்விகள் ,  இதுவரை முந்தைய தேர்வில் இடம்பெறாத புதிய கேள்விகளாக இருந்தன மொத்தமுள்ள , 10  பாடங்களில் , 8.6 வது பிரிவு அல்லது , 8.5 வது பிரிவில் இருந்து , 10  மதிப்பெண்களில் ,  ஒரு கேள்வி எதிர்பார்க்கப்படும்.  இந்த முறை , 8.5 வது பிரிவில் இருந்து மட்டும் ,  ஒரு கேள்வி இடம் பெற்று இருந்தது. அதுவும் ,  புளூ பிரின்டில்   கூறியுள்ள படி ,  புத்தகத்திற்கு வெளியே இருந்து சிந்தித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டதால் ,  மாணவர்கள் சற்று திணறினர் 43 வது கேள்வியில் ,  பொருள் மாறாமல் ,  சிந்திக்கும் வகையில் கேள்வியின் வடிவம் மாறியிருந்ததால் , மாணவர்கள் தடுமாறினர் ஆறு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில் நீளமாக இருந்ததால் ,  அவற்றை
+2 கணிதத் தேர்வு கடினம்: சேலம் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், முழு மதிப்பெண் பெற முடியாது என்ற விரக்தியில், சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வந்தார். ஆனால், நடந்து முடிந்த கணிதத் தேர்வில், கேள்வித் தாள் மிகவும் கடினமாக இருந்ததால், முழு மதிப்பெண் பெற முடியாது என்று அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதையடுத்து, தனது பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்த மாணவி. மாணவி எழுதிய கடிதத்தில், கணிதத்தில் தன்னால் முழு மதிப்பெண் பெற முடியாது என்பதால், தான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்குக் கூறியுள்ளார். இன்று காலை மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க