16 August 2022

 `கருணாநிதி உடனே அறிவிப்பார்; ஆனால் நீங்கள்..!- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் ஆசிரியர்கள்




தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை சுதந்திர தினத்தன்று கோட்டையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.


அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் சே.நீலகண்டன் கூறுகையில், "இந்திய நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 01.07.2022 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வழக்கமான நடைமுறையை சற்று தாமதமாக அறிவித்திருந்தாலும் மகிழ்வையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அதே வேளையில் மத்திய அரசு 2022 ஜனவரி முதல் வழங்கியுள்ள அகவிலைப்படியை, 2022 ஜூலை முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வுக்கேற்ப வழங்கப்படும் அகவிலைப்படி என்பது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாகும். அதையே காலம் தாழ்த்தி வழங்குவதே அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


எனவே தற்போது வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படியை 01.01.2022 முதல் அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே ஜனவரி மாதம் 31 சதவீதமாக உயர்த்தி வழங்கியபோதே நிதி நிலையை காரணம் காட்டி அகவிலைப்படியை தாமதமாக அறிவித்து, அகவிலைப்படி நிலுவையும் வழங்கப்படவில்லை. எனவே தற்போதும் அதைப் போன்றதொரு நடைமுறை பின்பற்றப்படுவது ஏற்புடையதாக இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி மத்திய அரசு அகவிலைப்படியை அறிவிக்கும் பொழுதெல்லாம் அதைப் பின்பற்றி உடனடியாக அறிவித்துவந்தார். எனவே அதையே பின்பற்றி அகவிலைப்படி உயர்வினை அறிவிக்க வேண்டும். 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்வினை அளித்து அதற்கான நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

 நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியீடு



நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!



சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.


பொன்முடி வெளியிட்ட சில முக்கிய தகவல்கள்:


- 2022-23 ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை காட்டிலும் அனைத்து பிரிவிலும் விண்ணப்பித்தோர் இந்த ஆண்டு அதிகம். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர மொத்தம் 2லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் விண்ணப்பித்தனர் .


- கடந்த ஆண்டை காட்டிலும் 36 ஆயிரத்து 900 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் பதிவு கட்டணம் 1லட்சத்து 69ஆயிரத்து 80 மாணவர்கள் செலுத்தினர்.


- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டில் அரசு பள்ளி மாணவர்களில் 22,587 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


- விளையாட்டு பிரிவில் 3102 விண்ணப்பம் பெறப்பட்டு, 1875 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்க்ப்ப்பட்டு, 1258 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.


- மாற்று திறனாளி 203 மாணவர்கள் , முன்னாள் ராணுவத்தினர் வாரிசு 970 மாணவர்களுக்கு தரவரிசை வெளியீடு.


- தமிழ்நாட்டில் 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அவற்றில் 1லட்சத்து 48ஆயிரத்து 811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்.


ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான தரவரிசையில் அரசின் புதிய வழிகாட்டுதல்படி +2 மதிப்பெண்ணுடன், 10 ம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்பட்டதால் ஒரு மாணவருக்கு கூட இந்த ஆண்டு சமவாய்ப்பு எண்ணுக்கான ( Random number) தேவை ஏற்படவில்லை.


- தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்ட மாணவர்கள் , இன்று முதல் 4 நாட்கள் ( 19.8.22 வரை ) அருகில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தை ( TFC's) நாடலாம். மாணவர்கள் கூறும் குறைகளில் நியாயம் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும்.


- 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றாலும் , 7.5 விழுக்காடு வேண்டி விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களும் 19.8.22 ம் தேதி வரை தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்று தங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தங்களை இணைத்து கொள்ளலாம். இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெறும் இடத்தில் A B C ... என்ற வரிசையில் தர வரிசையில் இணைத்து கொள்ளப்படுவர். உதாரணத்திற்கு 7.5 ஒதுக்கீட்டில் 50 வது இடம் பெறும் மாணவர் தாமதமாக 4 நாளுக்குள் தன்னை இணைத்து கொண்டால் அவருக்கு 50 A ...50B என வழங்கப்படும் , இதன் மூலம் 50 வது இடத்தில் தற்போது உள்ள நபருக்கு அடுத்ததாகவும் 51 வது இடத்தில் உள்ளவருக்கு முன்பாகவும் நேர்முகத் தேர்வில் இந்த மாணவர் கலந்து கொள்ள முடியும்).


- தொழில்நுட்ப கல்வி இயக்க அழைப்பு மையத்தின் எண்ணான 18004250110 -ல் மாணவர்கள் தங்களது கேள்விகளை கேட்டு தெளிவுபெறலாம்.


- முதல் மதிப்பெண் ரஞ்சிதா , snsm higher sec school கேரளாவின் கொல்லம் . தமிழ்நாட்டு மாணவி. கேரளாவில் பயின்று இங்கு விண்ணப்பித்துள்ளார். ( ஒரு மாணவர் இந்தியாவில் எங்கு பயின்றாலும் தமிழ்நாட்டு இருப்பிடச் சான்று வழங்கினால் தமிழ்நாட்டில் பொதுப்பிரிவு பட்டியலில் இடம் பெற்று உயர் கல்வியில் அவர் சேரலாம்)


- 2ம் இடம் ஹரினிகா அவ்வை பள்ளி , ஜடையாம்பட்டி , தருமபுரி


- 3 ம் இடம் லோகேஷ் கண்ணன் , வேலம்மாள் மெட்ரிக்பள்ளி . திருவள்ளூர்


- முதல் 10 இடம் பெற்ற நபர்களும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.


மேலும், முதல்வர் அறிவித்தபடி பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியாக உள்ளது" என்று பொன்முடி கூறினார்.

 மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது-முறையாக அமல்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு



1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றம் 1 மற்றும் 2 ம் வகுப்பு படிப்பவர்களுக்கு வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும்.


பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுப்பாடம் தரப்படும் போது, அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்துமுடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித் துறை ஏற்கனவே அறிவுறுத்தியது. மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாட விவரம், மாணவர்கள் சமர்ப்பிக்கும் விவரம் போன்றவற்றை உரியமுறையில் பராமரிக்கவும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு!!



பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியாகிறது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் படிப்பில் சேர்வதற்கு உயர்கல்வி துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க ஒன்று புள்ளி 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை இன்று காலை 10:30 மணிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது.


இதில் விளையாட்டு பிரிவு ,மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டிலும் முதற்கட்ட கவுன்சிலிங் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளின் 7.5% ஒதுக்கீட்டின்படி 20, 000 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்ட கலந்தாய்வு 23ஆம் தேதி முடிவடைகிறது. வருகிற 25ஆம் தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. மொத்தம் 4சுற்றுக்களாக அக்டோபர் 21ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அக்.22 மற்றும் 23 ஆம் தேதிகளில் துணை கலந்தாய்வு நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...