16 September 2017

இன்று பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் புதிய விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. 

இதன்படி, இன்று போட்டித் தேர்வு நடக்கிறது.இந்த தேர்வு எழுத தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக 84தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

ஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகாசம் நீடிப்பு

இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம்வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், அதற்கான ஆசிரியர் தகுதி தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, 2009 முதல், 2014 வரையும், அடுத்து, 2014 முதல், 2019 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், கட்டாய கல்வி உரிமை சட்டம்அமலான பின், பணியில் சேர்ந்துஇருந்தால், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டது. ஆனால், பல லட்சம் ஆசிரியர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. மத்திய அரசின் உத்தரவுக்கு, தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., நிறுவனத்தில், புதிதாக இரண்டு ஆண்டு டிப்ளமா ஆசிரியர் கல்வியியல் படிப்பு துவங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள், 2019க்குள் இந்த படிப்பை முடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

படிப்பில் சேர, www.nios.ac.in என்ற இணையதளத்தில், செப்., 15க்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. நாடு முழுவதும், பல லட்சம் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் முயற்சித்ததால், இந்த இணையதளம் முடங்கியது. இதுகுறித்து, என்.ஐ.ஓ.எஸ்.,சுக்கு புகார்கள் வந்ததால், ஆசிரியர் தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர்வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.

 முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில்சென்று கலந்து கொள்ள வேண்டும்.முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும்,பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலகங்களில் நடத்தப்படும்.

முதல்வர் வழங்குவார்:

 கலந்தாய்வில் கலந்துகொண்டு பணிநியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு.. உடனடியாக ஒத்தி வைக்க தமிழக அரசிடம் சீமான் வலியுறுத்தல்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்ட...