Posts

Showing posts from December 8, 2023
Image
  TRB - முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு ( CMRF ) ஒத்திவைப்பு! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .02 / 2023 , நாள் 16.10.2023 ன்படி 10.12.2023 அன்று நடைபெற இருந்த முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு ( CMRF ) மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் மற்றும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்வானது வருகின்ற 17.12.2023 அன்று நடைபெறும் என அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.  தேர்வர்கள் 10.12.2023 அன்று நடைபெற இருந்த தேர்வு நுழைவுச்சீட்டினை 17 : 12.2023 அன்று நடைபெறவுள்ள தேர்வுக்கு பயன்படுத்தலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது .
Image
  TRB - BEO | ஒத்திவைக்கப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு. 2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் அறிவிக்கை எண் .1 / 2023 , நாள் .05.06.2023 ன் படி 04.12.2023 அன்று நடைபெற இருந்த வட்டாரக் கல்வி அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் மற்றும் பணிநாடுநர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்திவைக்கப்பட்டது.  இச்சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது வருகின்ற 14.12.2023 அன்று நடைபெறும் என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  பணிநாடுநர்கள் 04.12.2023 அன்று நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தினையே 14.12.2023 அன்று நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பயன்படுத்தலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .