27 January 2013

5 வகுப்புக்கு ஒரே ஆசிரியர் பள்ளிக்கு பூட்டு போடுவோம் கூடுதல் ஆசிரியர் நியமனம் கோரி போராட மக்கள் முடிவு 

வேதாரண்யம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும், இல்லாவிடில் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

 நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கொத்தங்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30 மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். இங்கு தனலட்சுமி என்ற ஆசிரியையும், சிங்காரவடிவேல் என்ற ஆசிரியரும் பணியாற்றி வந்தனர். இதில் தனலட்சுமி வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்றுவிட் டார். குடும்ப பிரச்னை தொடர்பாக சிங்கார வடி வேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

அதன்பின் கடந்த வரு டம் ஜூன் மாதம் தலைமை ஆசிரியராக மகேந்திரன் என்பவர்பொறுப்பேற்றார். அதிலிருந்து 5 வகுப்புகளுக்கும் இவர் ஒருவர் மட்டுமே ஆசிரியராகவும் இருந்து வருகிறார். 5 வகுப்புகளிலும் உள்ள 30 மாணவர்களையும் ஒரே அறையில் உட்கார வைத்து நடுவில் உட்கார்ந்து பாடம் நடத்தி வருகிறார். மீட்டிங் தொடர்பாக தொடக்க கல்வி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், அன்று பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 5வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியராக இருப்பதால் மாணவர்களுக்கு புரியும் படியாக பாடத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 இங்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் எனக்கோரி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேதரத்தினம், கல்விக் குழுத் தலைவர் தனபாலன் ஆகியோர் பலமுறை கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பலனில்லை. எனவே, இனியாவது உடனடியாக இப்பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் வேதரத்தினம் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர்பள்ளிகளே இருக்காது என்று அரசு 2 வருடங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது. கிராமப்புறத்தில் பெரும்பாலும் குழந்தை களை ஆங்கில பள்ளியில் படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்கள் மத்தியில் எங்கள் ஊர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்து படிக்க வைத்துள்ளோம். 

5 வகுப்புகளுக்கு ஒரே ஆசிரி யர் பாடம் நடத்துவது இய லாத காரியம். எனவே, உடன டியாக இப்பள்ளிக்கு மேலும் ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த மாத கடைசியில் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தமிழக அரசு மறு ஆணை வெளியிட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பற்றி அரசு மறு ஆணை வெளியிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்அலுவலர் கழக மாநிலத் தலைவர் ஆ. மரியதாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் நியமன ஒப்புதல்களை ரத்து செய்ய அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்23.8.2010-க்கு பின் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தகுதி தேர்வு பெற்றிருந்தால்தான், பணி அமர்த்த ஏற்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆசிரியர் நியமனங்கள் முறையாக ஏற்பளிக்கப்பட்டு ஊதியம் பெற்று வருகின்றனர். இத்தகைய ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த ஆணை 23.8.2010-க்கு முன்பாக வெளியிட்டு இருந்தால் பொருத்தமானதாக இருந்து இருக்கும். முன்தேதியில் அமலுக்கு வரும் அந்த ஆணையை மூன்றாண்டுகளுக்குப் பின் அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலம்தாழ்த்தி வெளியிடப்பட்ட அரசு ஆணை ஆசிரியர் நலனுக்கு எதிரானது. எனவே, இந்த ஆணைக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொருத்தமான காலக்கெடுவுக்குள் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று இருக்கவேண்டும் என்ற மறு ஆணையை அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கற்பித்தலை எளிமையாக்கினால் கணிதமும் இனிக்கும்' வாழ்க்கையில் எல்லாமே ஒரு கணக்கு தான். இசை கூட ஒரு கணக்கின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் இந்த கணக்கு பாடம் மட்டும் பெரும்பாலோருக்கு கசக்கும் மருந்தாகி விடுகிறதே ஏன்? இன்றைய கணித பாட திட்டங்கள் எல்லாமே தலையைச் சுற்றி மூக்கை தொடுவதாக உள்ளன. கற்பிக்க கூடிய விதத்தில் கற்பித்தால், கணிதமும் இனிக்கும்' என்கிறார், கணித பேராசிரியர் சிவராமன். அவரோடு உரையாடியதில் இருந்து... கணித பாடத்தை எளிமைப்படுத்துவது எப்படி? முறையான கற்பித்தல் இல்லாததால், பல மாணவர்களுக்கு கணிதம் கசக்கத்தான் செய்கிறது. கணிதத்தை காட்சிப்படுத்திபுரிய வைக்க வேண்டும். சாதாரண பெருக்கல், கூட்டல், கழித்தல் தெரியாமல், பல அரசு பள்ளி மாணவர்கள் ஆரம்ப பள்ளியை, முடித்துவிடுகின்றனர்.காரணம், மனப்பாடம் செய்யும் முறை தான். இரண்டு எண்களை பெருக்க, ஒரே வழியை தான் மாணவர்களுக்கு கற்று தருகிறோம். உதாரணமாக 2*2=4. இதை தவிர ஆறு முறைகளில் எளிய பெருக்கலை கற்று கொடுக்க முடியும். மேலும், கணிதத்தை மாதிரிகள் கொண்டு, வடிவங்களை உருவாக்குதல் முறை மூலமாக, விளையாட்டு ரீதியில் கற்று கொடுத்தால், எந்த எண்ணை பெருக்கவும் மாணவர்கள் சிரமப்பட மாட்டார்கள். ஆனால், கணிதத்தின் சூத்திரங்களை, அதே முறையில் கற்று கொடுக்க முடியுமா? கணித பாடத்திற்கு இதுவரை, 60 வகையான மாதிரிகளை, செய்து வைத்திருக்கிறேன். அதை மாநகராட்சி பள்ளிகளிலும், கற்று கொடுத்திருக்கிறேன். கணிதத்தின் மீதுகொண்ட, அளவற்ற ஈடுபாட்டால், "பை கணித மன்றத்தை' 2007 ஆம் ஆண்டு துவங்கினோம். இந்த கணித மன்றத்தில், தமிழகம் முழுவதும், 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் உதவியோடு, இயல் கணிதம், வடிவியல் உள்ளிட்ட பல்வேறு கணித பிரிவுகளுக்கு மாதிரிகளை உருவாக்கி வருகிறோம். இந்த மாதிரிகள் உதவியோடு, அடிப்படை கூறுகளை கற்று கொடுத்தால், கடினமான கணிதத்திற்கும் விடை கிடைத்துவிடும். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் ஈடுபாடு எப்படி? சென்னையில், இதுவரை 100 பள்ளிகளில் கணித ஆய்வு கூடம் அமைத்து, மாதிரிகள் கொண்டு விளக்கி உள்ளோம். மாணவர்களுக்கு அடிப்படை விஷயங்களை புரிய வைப்பதன் மூலம், ஆர்வத்துடன் கற்று கொள்கின்றனர்.ஒரு குச்சியை நகர்த்தும் போது, விழும் நிழல் மூலம்,"சைன், காஸ் தீட்டாக்களின்' மதிப்புகளை எளிதில் கற்பிக்க முடியும். இதன்மூலம், பொதுத்தேர்வில் மாணவர்கள் எளிதில், 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற முடியும். அரசு பள்ளிகளில் இதற்கான சூழல் இருக்கின்றனவா? பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், பாடத்தை நடத்துவதில் மட்டுமே, அக்கறை காட்டுகின்றனர். மற்றபாடங்களை போல, கணிதத்தில் புதுப்புது தகவல்களை, ஆண்டுதோறும் அறிஞர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால், பல ஆசிரியர்களுக்கே, அதை பற்றிய அறிதல் இல்லை. அரசு பணியில் சேர்ந்தவுடன், பொது அறிவை வளர்த்து கொள்வதில்லை. இதனால், மாணவர்களுக்கு, கணிதத்தை எளியமுறையில் கற்பிக்க தெரிவதில்லை. கணிதம் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளேன். அவற்றில், மாணவர்களுக்கு பலவழிகளில், ஒரே கணித கேள்விக்கு எப்படி விடைகாண்பது என்பது குறித்து, விளக்கம் அளித்துள்ளேன். எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள்? எண்களின் அன்பர், எண்களின் எண்ணங்கள்,நட்சத்திர கணித மேதை உள்ளிட்ட ஐந்து புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். மேலும், கணித சூத்திரங்களை எளிமைப்படுத்துவது குறித்து, ஆய்வுகளும் செய்து வருகிறேன். மாணவர்கள் பாடப்புத்தகங்களில், படிக்கும் கணித முறை, தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்று, பல்வேறு படிகளை கொண்டது. ஆனால், இதை எளிமையாக்கினால், கணிதம் கசக்காது; இனிக்கும்
8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை! "சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு. இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்குவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து இவர் கூறியதாவது: நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணிதுவங்கிவிடும்.காய்ச்சல் வந்தபோது, விபத்து நேரிட்ட போது கூட பள்ளிக்கு வந்து விட்டேன். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகள் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன். மற்ற நாட்களில் எனக்கு பதில் கணவர் செல்வார். என் பணிக் காலத்தில் இதுவரை 20 நாட்கள் மட்டுமேவிடுப்பு எடுத்துள்ளேன். நான் மட்டும் இல்லை. என் மகன் அரவிந்தன், மகள் அபர்ணா ஆகியோரும் பெரும்பாலும் விடுப்பு எடுப்பதுஇல்லை. நான் எடுக்கும் பாடப்பிரிவில் அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். பெரும்பாலான ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளேன். மீதமுள்ள ஒன்பது ஆண்டுகள் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று மாணவ, மாணவியர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பது தான் என் லட்சியம்.இவ்வாறு ஆசிரியை சசிகலாதேவிஉற்சாகத்துடன் கூறினார்

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...