16 June 2016

ஆசிரியர் படிப்பில் ஆர்வம் குறைகிறது இழுத்து மூடப்படும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்.
போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் ஏராளமான இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 29மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 38 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 320 சுயநிதிஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 13 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் இப்படிப்பில் சேர்க்கப்பட்டு இடைநிலைஆசிரியர் பணிக்கு (ஒன்றாம் வகுப்பு முதல்ஐந்தாம் வகுப்பு வரை) பணியமர்த்தப்பட்டு வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தால்தான் ஆசிரியர் பணி என்ற தமிழக அரசின் அறிவிப்பால் ஆசிரியர் பயிற்சி படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் இடைநிலைஆசிரியர் காலிப் பணியிடங்களும் மிகக் குறைந்த அளவே உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு வரவேற்பு இல்லை.

அரசு சார்பில் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுடன், இந்த ஆண்டு முதல் மேலும் மூன்று ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 13 ஆயிரம் இடங்களுக்கு இதுவரை 3 ஆயிரத்து 510 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் ஆண்டுதோறும் தனியார் சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் சுமார் 50 பள்ளிகள் வரை மூடப்பட உள்ளன.

ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தவர்கள் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களும் மிகக்குறைவான அளவே ஆண்டுதோறும் ஏற்படுகின்றன. ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்தால் வேலை கிடைப்பது அரிது என்ற நிலையில், கூடுதலாக தகுதித் தேர்வு கொண்டுவரப்பட்டது. இத்தேர்வையும் அரசு ஆண்டுதோறும் முறையாக நடத்தவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பணி நியமனத்தில் ஏராளமான குழப்பங்கள் நடந்து வருகின்றன. இதனால், இடைநிலை ஆசிரியர் படிப்பு படிக்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை,’’ என்றனர்.
பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் 'ஹால் டிக்கெட்.
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு, 'தத்கல்' உட்பட அனைத்து வழியிலும், விண்ணப்பித்தவர்கள் இன்று முதல், தங்கள், 'ஹால் டிக்கெட்'களை, www.tngdc.gov.in இணையதளத்தில், வரும் 18ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாத பொதுத்தேர்வுக்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம், 'ஹால் டிக்கெட்'டை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...தடை!: மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வரவே கூடாது என எச்சரிக்கை.
தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள்வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை: * மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், மாணவர்கள், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதித்து, 2007ம் ஆண்டே அரசாணை கொண்டு வரப் பட்டுள்ளது.இதன் படி, மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப் படுகிறது. இதை, ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்
* மீறி யாரும் கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து, ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்
* வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, ஆசிரியர்கள் மொபைல்போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும்; மீறினால், ஆசிரியர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி கல்வி இயக்குனர் அறிக்கை: *l வகுப்பறையில், ஆசிரியர்கள் எக்காரணம்கொண்டும் மொபைல் போன்களைபயன்படுத்தக் கூடாது. வகுப்பறையில், மொபைல் போனில் பேசினால், அந்த ஆசிரியர் மீது, தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, மொபைல் போனை கண்டிப்பாக எடுத்து வரக் கூடாது. மீறி கொண்டு வந்தால், அவர்களின் மொபைல் போனை ஆசிரியர்கள் பறிமுதல் செய்து, மாணவனின் பெற்றோரை வரவழைத்து, எச்சரிக்க வேண்டும்.

மிக சரியான முடிவு!
பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடைவிதித்தது, மிகச் சரியான முடிவு. தற்போது, 'ஸ்மார்ட் போன்' வந்துள்ளதால், அதில் பல வசதிகள் உள்ளன. 'கேம்ஸ்' ஆடுதல், 'வாட்ஸ் ஆப்'பில் வீடியோ, படம் அனுப்புதல், 'பேஸ்புக்' பார்த்தல் என ,வகுப்பறையில், மாணவர்கள் தேவையில்லாத வேலையில் ஈடுபடுகின்றனர்.

* மேலும், மொபைல் போன் காணாமல் போவதும், அதை விசாரிப்பதும், பள்ளி நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்கள், வகுப்பறை தவிர, மற்ற நேரத்தில் தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.பி.பேட்ரிக் ரைமண்ட் பொதுச் செயலர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

பெற்றோர் ஒத்துழைப்பு! :மொபைல் போன்கள் ஆக்க சக்தியாக இருந்தாலும், அதிலுள்ள அழிவுக்கான பாதைகளைத் தான், இளைய தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர். எனவே, பள்ளிகளில் மொபைல் போனுக்கு தடை விதிப்பது, தேவையான நடவடிக்கை. இதற்கு, பெற்றோர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஆசிரியர்களும், மொபைல் போனில் நேரத்தை கழிக்காமல், அவற்றை ஓய்வறையில் வைத்து விட்டு, பள்ளிப்பணிகளை கவனிக்கலாம்.இடைவேளை நேரங்களில், அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தலாம்.சாமி. சத்தியமூர்த்தி, தலைவர்,தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...