18 December 2012

பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

கோவை : பள்ளியில் பணி புரியாத ஆசிரியரை, மற்றொரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து"சாதனை' புரிந்துள்ளது, கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள இந்த தகவல், கோவை பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருவதை அம்பலமாக்கியுள்ளது. 

கோவை மாவட்டத்தில் ஆசிரியராக நியமனம் பெற, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க வசதியில்லாத ஆசிரியர்கள், வால்பாறை, ஆனைமலை, காடம்பாறை, ரொட்டிக்கடை உள்ளிட்ட மலைப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் புலி, யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதே காரணம். ஆனாலும் வேறு வழியில்லாமல் இங்கு பணி புரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஏழை ஆசிரியர்கள் உள்ளனர். 

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் போது, எப்படியாவது சமவெளிக்கு வந்து விடலாம் என்றால், அதற்கும் பேரம் உண்டு. சென்னை சென்று கவனிக்க வேண்டியவர்களை "கவனித்து' இடமாறுதல் உத்தரவு பெற்று திரும்பும் வரை,குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை மறைத்து வைத்திருக்க, கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கணிசமான தொகை வழங்கப்படுகிறது. இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்றாலும், மலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரியும்ஆசிரியர்கள் அங்கேயே தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 

குழந்தைகள் ஓரிடத்திலும், கணவர் வேறிடத்திலும் ஆண்டு கணக்கில் குடும்பமே பிரிந்து கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு பெண் ஆசிரியைகள் தள்ளப்படுகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் இடமாறுதல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சங்கனூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், மாவட்டத்தில் உள்ள கணித காலிப் பணியிட விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்., 17ல் பெற்றார். 

அதில், 23.7.2012ல் பொதுமாறுதல்ஆணை வழங்கப்பட்டவர்கள் பட்டியலில்,"எம்.பானு சரஸ்வதி' எனும் ஆசிரியையின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காடம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியை ஆக உள்ளார். ஆனால், இவர் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதாகவும், அங்கிருந்து காரமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வால்பாறை மற்றும்காரமடை பள்ளிகளில் விசாரித்தபோது, பானு சரஸ்வதி எனும் பெயரில் எந்த ஆசிரியையும் இல்லை என தெரிய வந்துள்ளது. காடம்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எம்.பானுசரஸ்வதியிடம் கேட்டதற்கு, ""பட்டதாரி ஆசிரியை ஆக பதவி உயர்வு மூலம் காடம்பாறையில் நியமிக்கப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடியும் இடமாறுதல் கிடைக்கவில்லை. கணவர் ஓரிடத்திலும் குழந்தைகள் பெற்றோரிடமும் உள்ளதால் கடும்மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்,'' என்றார். 

ஆனால் புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சிலருக்கு, கோவை பள்ளிக ளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மலைப்பள்ளி ஆசிரியருக்கு இடமாறுதல் வழங்கியதுபோல் ஆவணங்களில் காண்பித்து விடுவதும், பணம் பெற்றுக் கொண்டு அந்த இடங்களில் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை நியமித்து வந்துள்ளதும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தகுதி இருந்தும் இடமாறுதல் வழங்காமல் ஏமாற்றப்பட்ட ஆசிரியர்களும், கோர்ட்டில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகின்றனர்.
வேலை கிடைக்காத முதுகலை ஆசிரியர்கள் முற்றுகை : டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஓயவில்லை பரபரப்பு -அதெப்படி ஓயும் !!!!!!

முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள், நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தினமும், 100க்கும் மேற்பட்டோர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுவதால், எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. 

டி.இ.டி., தேர்வு, அதைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதிப் பட்டியலை, டி.ஆர்.பி.,வெளியிட்டதில் இருந்து, பல்வேறு பிரச்னைகளுடன், தினமும், 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுகின்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில், ஒருசில சான்றிதழ்களைகொடுக்காததால், இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள், தமிழ் வழியில் படித்து தேர்வு பெற்றும், அதற்கான இடஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைக்காதவர்கள் என, பல்வேறு காரணங்களுடன், மனுக்கள் கையுமாக, பட்டதாரிகள் வருகின்றனர். 

இப்படி வருபவர்களை, முறையாக அழைத்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற, டி.ஆர்.பி., மறுப்பதால், அலுவலக வாசலில் திரண்டு, கோஷம் போடுவதும், பட்டதாரிகளின் வாடிக்கையாக இருக்கிறது. முதுகலை ஆசிரியர், இறுதிபட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள் பலர், நேற்றும், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேனியைச் சேர்ந்த அம்பிகா கூறுகையில்,""நான், வேதியியல் பட்டதாரி. தேர்வில், 110 மதிப்பெண்களை பெற்று, தேர்வு பெற்றேன். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பி.எட்., சான்றிதழை அளிக்கவில்லை. தாமதமாக கிடைத்த சான்றிதழை, டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஒப்படைத்தும், இறுதி தேர்வு பட்டியலில், எனது பெயர் சேர்க்கப்படவில்லை. கேட்டால், அதிகாரிகள், எந்த பதிலும் அளிப்பதில்லை,'' என, புலம்பினார். 

இதேபோல், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அரசாணையை, டி.ஆர்.பி., அமல்படுத்தவில்லை என்றும், பலர் குற்றம் சாட்டினர். இந்த ஒதுக்கீட்டின் கீழ், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழ் வழியில் படித்த பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.

 இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழ் வழி படித்து, அதற்கான முன்னுரிமை பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, ஆய்வு செய்து வருகிறோம். பள்ளிக்கல்வி முதல், குறிப்பிட்ட கல்விதகுதி வரை, அனைத்துப் படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். ஆனால், பலர், இடையில், ஏதாவது ஒரு கல்வியை, ஆங்கில வழியில் படித்தவர்களாக இருக்கின்றனர். எனவே, விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்தபின், இந்த ஒதுக்கீட்டின் கீழ் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, தனியாக அறிவிப்பு செய்யப்படும். பணியிடங்கள் அதிகம் இருப்பதால், தகுதியான விண்ணப்பதாரர்கள், கவலைப்பட தேவையில்லை. 

இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. பட்டதாரிகள் வாழ்க்கையில் விளையாடும் டி.ஆர்.பி., * எந்த பாடங்கள், எந்த படிப்பிற்கு நிகரானது என, பல்வேறு கால கட்டங்களில், உயர் கல்வித்துறை, அரசாணைகளை வெளியிட்டுள்ளது. * இந்த அரசாணைகள் குறித்து, டி.ஆர்.பி.,க்கே தெரியவில்லை. இதனால்,தேர்வில் தேர்வு பெற்ற பட்டதாரிகள் பலர், வேலை கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

 * உயர்கல்வித்துறையிடம் கேட்டு, இந்த அரசாணைகளை, இணையதளத்தில் வெளியிடவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கவில்லை. * தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில், 20 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து, முந்தைய அரசு, அரசாணை வெளியிட்டது. இந்த ஒதுக்கீட்டை, டி.ஆர்.பி., சரிவர கடைபிடிப்பது இல்லை என, தேர்வர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

* டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறதா என்ற விவரங்களை, நேற்றுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.

 * வேலைக்கு ஏற்ற கல்வித்தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என, அரசாணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிப்படிப்பு முதல், வேலைக்கு ஏற்ற கல்வி நிலை வரை, அனைத்து படிப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என கூறி, ஏராளமான பட்டதாரிகளுக்கு, வேலை வழங்க, டி.ஆர்.பி., மறுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு 

முதுகலை ஆசிரியர் பணிக்கு காலியாக உள்ள 1200 இடங்கள் அடுத்த ஆண்டிற்குள் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர்.பி.,க்கு கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே ஜனவரியில் புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி தேர்வில் இருந்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எம்.பில் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பயனற்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை காரணம் காட்டி, ஊதியம் வழங்க மறுப்பதை கைவிட வேண்டும். மேலும் அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண் டும். அரையாண்டு தேர்வு களை கடந்த ஆண்டுகளை போல் நடத்த வேண்டும். கடந்தஆகஸ்ட் மாதம் நடந்த கவுன்சலிங்கில் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதாக கூறி, சில ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் தற்போது அதே பணியிடங்களில் மீண்டும்ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட இணை செயலாளர் லூயி ஜான்பிரிட்டோ, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கலைத்தங்கம், கண்ணன், ரிஷிகேசவன், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...