22 August 2014

முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது- Tamilmurasu

முதல்வர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பின்னர், உடனடியாக விடுவித்தனர். இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரை சந்திக்கப்போவதாக பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்தனர். 

இதைத் தொடர்ந்து முதல்வர்வசித்து வரும் போயஸ் கார்டன், முதல்வர் தலைமை செயலகம் செல்லும் பாதை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல்வர் வீட்டை முற்றுகையிட போவதாக பட்டதாரி ஆசிரியர்கள் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற அண்ணா சதுக்கம் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். 

அதேபோல் 50க்கும் மேற்பட்டோர் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஒன்று கூடி புறப்பட்டனர். அவர்களையும் மெரினா போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

போராட்டம் குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை நீக்காவிட்டால் வயது முதிர்ந்த பட்டதாரிகள் எந்த காலத்திலும் பணி நியமனம் பெறமுடியாத நிலை ஏற்படும். 

எங்களின் இந்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கைஎடுக்காவிட்டால், டிஇடி முடித்த 62,500 பேர் தொடர் உண்ணாவிரதம் இருப்போம். அதற்கும் நடவடிக்கை இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றனர்.
12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார் - தினமலர்

ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த, மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது.

 எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா, அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால், பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை.

 கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பிரமாண்டமாக நடந்தது. அதன்பின், தற்போது தான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. 

இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில், நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு, முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். 2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது. 

ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு, இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும், 28ம் தேதிக்குள், 2,000 பேரின், தேர்வு பட்டியல், trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது
இடைநிலை ஆசிரியர்கள் 2582 பேர் விரைவில் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் பணியமர்த்த இடைநிலை ஆசிரியர்கள் 2ஆயிரத்து 408 பேர் விரைவில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது. 

இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது. விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.

 இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்புவது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிலுவையில் (பேக்லாக்) இருக்கும் பணியிடங்கள் 845 ஆகும். அவற்றில் பெண்களுக்கு 307 இடங்கள். மேலும் ஆதிதிராவிடர்களுக்கு அதிக இடங்கள் இருக்கின்றன.

 நிலுவையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிலுவையில் இல்லாமல் இந்த வருட காலிப்பணியிடங்கள் 830. அவற்றில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கு மட்டும் 88 இடங்கள் உள்ளன. பெண்களுக்கு 327 இடங்கள் உள்ளன. மேலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளில் 64 இடங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 பணியிடங்களும் உள்ளன. மொத்தத்தில் 2 ஆயிரத்து 408 இடங்கள் உள்ளன. 

இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...