TNTET - சென்னையில் ஆசிரியர் பயிற்சி பட்டதாரிகள் கைது
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையரிடம் மனு அளிக்க வந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் 50க்கும் அதிமானோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதி மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அவர்கள் மனு அளிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அலுவலகத்தில் ஆணையர் இல்லாததால் மனு அளிக்க முடியாத நிலையில் அங்கு கூடியிருந்த பட்டதாரிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
7 September 2014
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’மனு வழக்குவிசாரணை திங்கட்கிழமை நடைபெறுமா?
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்' செய்துள்ளது.
பணி நியமனத்துக்கு தடை
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்றும்,தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல்செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கானகவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது'என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்தமனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல்செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை 'அப்பீல்' மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
திங்களன்றும் நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை என்பதால் நீதியரசர்கள் எஸ். மணிக்குமார் கே.எஸ் இரவி வேறு அமர்வுக்கு அடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு விசாரணை நடைபெறக்கூடும் எனஎதிர்பார்க்கப் படுகின்றது.உறுதியான தகவல் கிடைத்தவுட வெளியிடும்.
அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி.,– தின மலர் நாளேடு
‘ ஆசிரியர் தகுதிதேர்வில்(டி.இ.டி.,) தேர்ச்சிபெற்று,அரசுப்பணி கிடைக்காமல் காத்திருப்போர்,அடுத்த பணிநியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில்தான்,ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’என,ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது.
டி.இ.டி.,தொடர்பான,அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதால்,இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும்,தங்களை,அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர்.
தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல் ,டி.ஆர்.பி.,சிக்கித் தவிக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27ஆயிரம்பேரும்,சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும்,தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில், 74ஆயிரம்பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.
ஏனெனில்,தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வுபெறுவோர் போக,மீதம் உள்ளவர்களுக்கு,அடுத்த பணிநியமனத்தின் போது, முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள், எதிர்பார்த்து இருக்கின்றனர்.ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு,டி.ஆர்.பி.,முன் வரவில்லை.
எனினும், இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இருதரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடுசெய்து,இடஒதுக்கீடுவாரியாக, அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே,ஆசிரியர் பணிக்கு,தேர்வு செய்யப்படுவர்.தேர்வுபெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும்போது , முன்னுரிமை கோர முடியாது.
அடுத்து,மீண்டும், டி.இ.டி.,தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனேவ, 2013ல் தேர்ச்சி பெற்று,அரசுபணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து,அதில்,அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரரே, அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
TET 2013 ஆன்லைனில் சான்றிதழ் வெளியீடு
கடந்த 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழை, பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் ஆன்லை னில் டிஆர்பி வெளியிட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. இதில், 27ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி அடைந்தனர். அதன்பின், கடந்த ஜன. 10ம் தேதி விடைகளில் மாறுதல் செய்யப்பட்டதில் கூடுதலாக 2 ஆயிரத்து 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக தமிழக அரசு குறைத்ததையடுத்து மேலும், 42 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக உயர்ந்தது.
இவர்கள் அனைவருக் கும் பகுதி, பகுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெறும் கட்&ஆப் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியர் பணி வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டு, கட்&ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 2013ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (முதல் மற் றும் 2ம் தாள்) அனைவருக் கும் ஓராண்டிற்கு பின் டிஆர்பி இணையதளத்தில் தேர்ச்சி சான்றிதழ் வெளியிடப்பட்டது.
தகுதி தேர்வு பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, டிஆர்பி இணையதளத்தில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சான்றிதழ்களை கலராக (வண்ணம்) பிரின்ட் எடுத் துக் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழை பதிவிறக்கம் செய்தவர்கள், அதில் ஏதாவது பிழைகள் இருப்ப தாக அறிந்தால் டிஆர்பியை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 7 ஆண்டுகள் தகுதி உடையதாக இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த சான்றிதழ் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்குமா?இதுவரை அறிவிப்பு இல்லாததால் சந்தேகம்??
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும்தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது.
இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது.
2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது. என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது.
நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
சிக்கல்:
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது.
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பட்டதாரிகள்:
இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...