Posts

Showing posts from April 5, 2023
Image
  லட்சங்களில் காத்திருக்கும் பட்டதாரிகள்; ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்?- அன்புமணி கேள்வி அரசு ஆசிரியர் பணியை லட்சக்கணக்கான பட்டதாரிகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன் எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை நடப்பாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், மூன்று மாதங்கள் நிறைவடைந்தும் இன்று வரை எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை.  அரசு ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தாமதம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் இறுதியில் வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்த
Image
  புதுச்சேரியில் வரும் கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம்: அரசு உறுதி மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதுச்சேரியில் வரும் கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ''புதுச்சேரியில் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.  எல்லா திட்டங்களையும் நல்ல முறையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். மாணவர்கள் அரசு கொடுக்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வி கற்று வல்லவர்களாக உருவாக வேண்டும். மாநிலத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்'' என்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''முதல்வர் ரங்கசாமி
Image
  கியூட் நுழைவுத் தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள்: பல்கலைக் கழக மானியக் குழு தகவல் இளங்கலை படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள மத்திய, மாநில பல்கலை கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர பொது நுழைவுத் தேர்வு கியூட் தேர்வு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு மே மாதம் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப தேதி மார்ச் 30ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. இதுகுறித்து பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறியதாவது, 'இந்த ஆண்டு இளங்கலை கியூட் நுழைவுத் தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது 2022ம் ஆண்டு கியூட் தேர்வு அறிமுகமானபோது செலுத்தப்பட்ட விண்ணப்பங்களை விட 41 சதவீதம் அதிகம். அதிகபட்சமாக டெல்லி பல்கலைக் கழகம், தொடர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், அலாகாபாத் பல்கலைக் கழகம், பாபாசகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகம் மற்றும் ஜமியா பல்கலைக் கழகங்கத்துக்கும் விண்ணப்