Posts

Showing posts from August 19, 2013
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல் 80 முதல், 120 கேள்வி வந்திருப்பதாக கூறப்படுகிறது. தர்மபுரி: டி.இ.டி.,வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார்,ஆறுபேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,வினாத்தாள் உண்மையில் அவுட்டானதாகவும்,அந்த தகவலை போலீஸார் மறைப்பதாகவும்,இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த, 17மற்றும், 18ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு (டி.இ.டி.,)தேர்வு நடந்தது. கடந்த, 17ம் தேதி தர்மபுரியில் வினாத்தாள் கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்,இரண்டு பேர் உள்ளிட்ட,ஆறு பேரை தர்மபுரி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு,குரூப்2தேர்வின் போது,தர்மபுரி மற்றும் ஈரோட்டில் இத்தேர்வுக்கான விடைத்தாள் அவுட்டானது. இது தொடர்பாக தர்மபுரி,ஈரோடு,விழுப்புரம்,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது,சி.பி.சி.ஐ.ட
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி? ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்.  பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:– 12–ம் வகுப்பு 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதி
தமிழகம் முழுவதும் 4 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதினர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1,060 மையங்களில் நடந்தது.2 லட்சத்து 90 ஆயிரம் பெண்கள் உள்பட 4 லட்சத்து 77 ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். தமிழ் பாட கேள்விகள் தவிர மற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக பெரும்பாலானோர் தெரிவித்தனர். 4 லட்சம் பேர் எழுதினர் அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 62 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். 11,558 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ், கணித பிரிவுகளில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய பல ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1060 மையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எளிதான கேள்விகள் தேர்வு எழுதிவிட்டு
அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு முடிவு தகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கும்விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம்தாங்கள் எந்தெந்த கேள்விக்கு என்னென்ன பதில் அளித்துள்ளோம்?என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் விடைகளை சரிபார்த்து கொள்வதற்காக‘கீ ஆன்சர்’வெளியிடப்படுவது வழக்கம். கீ ஆன்சர் வெளியிடுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்)3வாரத்திற்குள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்,அதைத்தொடர்ந்து தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’என்று தெரிவித்தனர்.