21 November 2013

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. 

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், தங்களது வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று தங்களது பதிவு விபரத்தை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. 

இதற்கான அறிவிப்பு அந்தந்த மாவட்ட வேலைவாய்பு அலுவலகத்தின் மூலம் வெளியிடப்படும் எனத்தெரிகின்றது. இதன்படி தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை 28.11.2013 க்கு ஒத்திவைப்பு முதுகலைப்பட்டதாரிதமிழ்ஆசிரியர்களுக்கானபோட்டித்தேர்வில்,பிவரிசைவினாத்தாளில்40கேள்விகள்எழுத்துப்பிழைகளுடன்இருந்தன.பிழையானகேள்விகளுக்குமுழுமதிப்பெண்வழங்கவேண்டும்எனக்கோரிசென்னைஉயர்நீதிமன்றமதுரைகிளையில்மனுதாக்கல்செய்யப்பட்டது. 

இந்தமனுவைவிசாரித்தநீதிபதிஎஸ்.நாகமுத்து,தமிழ்ப்பாடத்துக்குமறுதேர்வுநடத்தஆசிரியர்தேர்வுவாரியத்துக்குஉத்தரவிட்டார்.இந்தஉத்தரவைஎதிர்த்துதமிழகஅரசின்பள்ளிக்கல்வித்துறைமுதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பிசெயலர்ஆகியோர்மேல்முறையீடுமனுவைத்தாக்கல்செய்தனர்.

தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து வழக்கினை ஒத்திவைத்தது அவ் வழக்கு .நாளை ( நவம்பர் 12 ந் தேதி) வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.

அன்றுநீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.இதற்கிடையில்அவ்வழக்கு இவ்வாரம் மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று( 21.11.2013) விசாரணைக்கு வந்தது. 

முதுகலைப்பட்டதாரிதமிழ்ஆசிரியர்களுக்கானபோட்டித்தேர்வில் A C D வகை வினாத்தாள்களக்கொண்டு தேர்வெழுதியவர்கள் சார்பில் வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜராகி மறுதேர்வு நடத்துவதால் தேர்வெழுதியவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் தேர்வெழுதிய அனைத்து பிரிவினருக்கும் பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்யலாம் என்ற TRB யின் யோசனக்கு பதிலாக B வினாத்தாளில் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்து அதனை 150 மதிப்பெண்களுக்கு மாற்றி தேர்வுமுடிவுகளை வெளியிடலாம் என தங்கள் தரப்பு கருத்துக்களை எதிர்மனுவாக தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் இன்று அஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன்பேரில் வழக்கின் அடுத்தவிசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் இந் நிலையில் அடுத்த விசாரணையின்போதுதான் அரசின் நிலைப்பாடும் பிற எதிர்மனுதாரர்களின் நிலைப்பாடும் தெரியவரும்
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று (21.11.2013) விசாரணை முதுகலைப்பட்டதாரிஆசிரியர்களுக்கானபோட்டித்தேர்வில்,பிவரிசைவினாத்தாளில்40கேள்விகள்எழுத்துப்பிழைகளுடன்இருந்தன.பிழையானகேள்விகளுக்குமுழுமதிப்பெண்வழங்கவேண்டும்எனக்கோரிசென்னைஉயர்நீதிமன்றமதுரைகிளையில்மனுதாக்கல்செய்யப்பட்டது. 

இந்தமனுவைவிசாரித்தநீதிபதிஎஸ்.நாகமுத்து,தமிழ்ப்பாடத்துக்குமறுதேர்வுநடத்தஆசிரியர்தேர்வுவாரியத்துக்குஉத்தரவிட்டார்.இந்தஉத்தரவைஎதிர்த்துதமிழகஅரசின்பள்ளிக்கல்வித்துறைமுதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பிசெயலர்ஆகியோர்மேல்முறையீடுமனுவைத்தாக்கல்செய்தனர்.

தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து வழக்கினை ஒத்திவைத்தது அவ் வழக்கு .நாளை ( நவம்பர் 12 ந் தேதி) வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.அன்றுநீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

இதற்கிடையில்அவ்வழக்கு இவ்வாரம் மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று 21.11.2013அவ் வழக்கு விசாரணைக்கு வருகின்றது என்ற தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. .அரசின் நிலைப்பாடும் எதிர்மனுதாரர்களின் நிலைப்பாடும் தெரியவரும் .இன்று வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு நமக்கு மாலை தெரியவரும்
தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை நீக்கம் செய்ய ஐகோர்ட் அதிரடி தடை - தினகரன் செய்தி 

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து5ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும்,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய,பள்ளி கல்வி இயக்குனர்7ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில்,அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும்,தகுதி தேர்வில் வெற்றிப்பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யவும்,அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பப் பெறவும் மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதையடுத்து ,தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி,தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணிய சிவா உட்பட பலர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.மனுவில், ‘எங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற5ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த கெடு முடிவதற்கு முன்பு,தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்தை கூறி பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது சட்டவிரோதம். எனவே,தகுதி தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய,பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யவேண்டும்‘என கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுக்களை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஐசக்மோகன்லால்,சேவியர் ரஜினி,லஜபதிராய்,லூயிஸ் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி,அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதே கோரிக்கைக்காக,மதுரையை சேர்ந்த ஆசிரியர்கள் முருகன்,பிரேமலதா,ராம்சங்கர்,சதீஷ்குமார்,உமா,புவனேஸ்வரி,நாகராஜன் மற்றும் தஞ்சாவூர் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர்,சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,பள்ளி கல்வி இயக்குனர் நவ.7ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம் கோர்ட் உத்தரவையடுத்து,கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ.,அலுவலகத்தில் நவ.23முதல் வழங்கப்படுகிறது. 

அக்., 2012ஜூலையில்,டி.ஆர்.பி.,சார்பில்,டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள்1, 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது .தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க உத்தரவிடவேண்டும் என,சிலர் கோர்ட்டை அணுகினர். 

இதையடுத்து,டி.இ.டி.,தேர்ச்சிக்கான முடிவு,மதிப்பெண்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டாலும்,தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என,கல்வித்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், 2012ல்,டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சி.இ.ஓ.,அலுவலங்களில் நவ., 23முதல் டிச.,15வரை தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதி,வெற்றி பெற்றவர்கள்,ஏற்கனவே,பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு,கல்வித்துறை அனுப்பிய அழைப்பு கடிதத்துடன் நேரில் வர வேண்டும். தேர்வர்கள் தவிர,பிறரிடம் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும்,தபாலிலோ,கொரியர் மூலமோ சான்றுகளை அனுப்ப இயலாது எனவும்,சி.இ.ஓ.,க்கள் தெரிவித்தனர்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...