28 March 2024

 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்; 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு




12 ஆம் வகுப்பு கணித் தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெற்றது. இதில் கணிதத் தாள் மார்ச் 19 ஆம் தேதி நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு கணிதத் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவித்தனர்.


இந்தநிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத் தேர்வில் 13 மதிப்பெண்கள் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கணித வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 13 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


வினாத்தாளில் கேள்வி எண் 17, கேள்வி எண் 25 மற்றும் கேள்வி 47 ஆகியவை தவறாக கேட்கப்பட்டிருந்ததாக கணித ஆசிரியர்கள் தேர்வுத் துறைக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். 


இந்தநிலையில், அந்த கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள். இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!!!



தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


தமிழ் மற்றும் ஆங்கிலம் என 65 துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான எழுத்து தேர்வு உத்தேசமாக ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை விண்ணப்பிக்கலாம்.

 TANCET 2024 தேர்வு முடிவுகள் வெளியானது..மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? - முழு விபரம் இதோ..!




TANCET Result 2024: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.படிப்புகளில் சேருவதற்கும். அதேபோல் இன்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'டான் செட்' தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.


இந்த நிலையில், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET 2024) முடிவை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu என்ற பக்கத்தில் டான்செட் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வர்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் மதிப்பெண்களைச் தெரிந்துகொள்ளலாம். 


பல்கலைக்கழகம் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை (CEETA PG) முடிவையும் அறிவித்துள்ளது.


நேரடி இணைப்பு: https://tancet.annauniv.edu/tancet/index.html


TANCET 2024 முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:


தேர்வு தேதி: மார்ச் 9


முடிவு தேதி: மார்ச் 28


இணையதளம்: tancet.annauniv.edu


உள்நுழைவு விவரங்கள்: மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்


டான்செட் மற்றும் சிஇஇடிஏ பிஜி தேர்வுகளின் மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 3 முதல் மே 3 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, டான்செட் தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெற்றது. முதல் ஷிப்டில் எம்சிஏ (MCA) தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்தப்பட்டது. இரண்டாவது ஷிப்டில், மதியம், 2:30 முதல், 4:30 மணி வரை எம்பிஏ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. எம்சிஏ தேர்வுக்கு 9,206 பேரும், எம்பிஏ தேர்வுக்கு 24,814 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.


முதுகலை பொறியியல், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் (ME/MTech/MArch/MPlan) படிப்புகளுக்கான CEETA முதுநிலை தேர்வு மார்ச் 10 அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 5,281 பேர் விண்ணப்பித்திருந்தனர்.


பல மாணவர்கள் சிறிய திருத்தங்களுக்காக (பெயரில் இனிஷியல், பெயரில் எழுத்துப்பிழை, பிறந்த தேதி, பாலினம், சமூகம், இருப்பிடம் போன்றவை) அணுகுவதாகவும், tanceeta@gmail.com சரியான ஆதாரங்களை சமர்ப்பிப்பதன் மூலம் சுயவிவர தரவை மாற்ற / மாற்ற இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


TANCET/CREETA PG 2024 முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?


நுழைவுத் தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைத் திறக்கவும்: tancet.annauniv.edu. TANCET/CEETA PG 2024 முடிவு பக்கத்திற்குச் செல்லவும்.


உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.


உள்நுழைந்து உங்கள் மதிப்பெண்களை சரிபார்க்கவும்.


எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் இதர முதுநிலை படிப்புகளுக்கும் டான்செட் மற்றும் சீட்டா பி.ஜி., மூலம் பொது கலந்தாய்வு நடத்தப்படும். விரிவான அட்டவணை மற்றும் கலந்தாய்வு செயல்முறை விரைவில் பகிரப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 TNPSC Group1 || 90 பணியிடங்களுக்கான தேர்வு தேதியை அறிவிப்பு.!!



தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் குரூப்-1 தேர்வுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.



அதன்படி தமிழ்நாடு அரசின் கீழ் காலியாக உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர், இணை பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரி உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதில் 16 துணை ஆட்சியர்கள் 23 துணை காவல் கண்காணிப்பாளர்கள் பதவிகள் அடங்கும். 21 வயது முதல் அதிகபட்சம் 39 வயது உடைய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 


இந்த காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவு வெளியான பிறகு முதன்மை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...