Posts

Showing posts from April 13, 2022
  கணவர் பெயரில் ஜாதி சான்றிதழ் ஏற்கப்படாது: டி.என்.பி.எஸ்.சி.   'டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், கணவர் பெயருடன் கூடிய ஜாதி சான்றிதழ் வழங்கினால் ஏற்கப்படாது' என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள வழிகாட்டுதல்கள்:ஜாதி சான்றிதழை பொறுத்தவரை, பழைய அட்டை வடிவிலான சான்றிதழ் இருந்தால் போதுமானது. தற்போது வழங்கப்படும் 'ஆன்லைன்' வழி சான்றிதழும் ஏற்றுக் கொள்ளப்படும்.  ஆன்லைன் சான்றிதழ் வைத்துள்ளோர், அட்டை வடிவ சான்றிதழ் பெற வேண்டியதில்லை.ஜாதி சான்றிதழில் கணவர் பெயர் அல்லது கணவர் சார்ந்த ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தால், அந்த சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படாது.பெற்றோர் கலப்பு திருமணம் செய்திருந்தால், தந்தை அல்லது தாய் சார்ந்த ஜாதி பெயரில், சான்றிதழ் பெறலாம்.  ஜாதி சான்றிதழில், தந்தை பெயர் திருத்தப்பட்டு இருந்தால், பெயர் மாற்றம் குறித்து, அரசிதழ் பதிவின் அடிப்படையில் ஏற்கப்படும். ஏற்கனவே வைத்திருந்த ஜாதி சான்றிதழ் தொலைந்து, புதிய சான்றிதழ் பெற்றிருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும்.இவ்வாறு அதில்
 ` TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டியுங்கள்'- ஆசிரியர்கள் கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இதற்காக இளநிலை கல்வியியல் படித்தவர்களும், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்ற நிலையில், பலருக்கு OTP வருவதில் சிக்கல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இளநிலை கல்வியியல் முடித்தவர்களுக்கான அத்தாட்சி சான்றுகளும் செவ்வாய்க்கிழமைதான் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. எனவே TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பலரும் இணையதளம் வாயிலாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் 5 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தத
Image
  ஆசிரியர் தகுதி தேர்வுக்கு(TET) விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்... சர்வர் பிரச்னையால் அவகாசம் கேட்கும் தேர்வர்கள்.. 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. அதனையடுத்து, ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருந்த பி.எட் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 12ஆம் தேதிவரை காலை வரை 3.41 லட்சம் தேர்வர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்ப அவகாசம் ஏப்ரல் 13 உடன் நிறைவடைய உள்ள நிலையில், இணையதளம் தாமதமாக செயல்படுவதாக தேர்வர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஒரே நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முயற்சித்ததால், சர்வர் கோளாறு ஏற்பட்டதாகவும், எனவே அந்த பேண்ட்வித் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பி.எட் இறுதியாண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்றுதான் வழங்க