Posts

Showing posts from January 6, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வினை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியார்டி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் - போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாக பங்கேற்றனர் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போல் தமிழக அரசு பல போராட்டங்களுக்கு பிறகும் இன்னும் வழங்கவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் பள்ளிகளை இழுத்து மூடக் கூடிய பெரிய அளவிலான போராட்டமாகத் தான் இருக்கும் என்று தூத்துக்குடியில் ஏராளமான பெண் ஆசிரியர்கள் பங்கேற்ற தொடர் முழக்க போராட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சிவன் ஆவேசமாக பேசினார். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்குவழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் மவுனம் சாதித்து மெத்தனம் காட்டிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசின் இந்த செயல் தொடக்கநிலை ஆசிரியர்கள்
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை  தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இதை தவிர்க்க, அனைத்து குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்க நடப்பு கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகளில், தேர்வு செய்யப்பட்ட 320 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது.  இதனால் ஏழை பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 பிரிவுகள் ஆங்கில வழி கல்வியில் இருக்கும். இதுவரை ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. தற்போது இந்த பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள்.  துவக்கப் பள்ளி நிலையிலேயே இந்த ஆண்டு ஆங்கில வழி தொட
30 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் டி.என்.பி.எஸ்.சி., சுறுசுறுப்பு! கடந்த ஆண்டில், தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு, 24 ஆயிரம் பேரை தேர்வு செய்து, சாதனை படைத்த, டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அரசின் பல்@வறு துறைகளில் தேவைப்படும், பணியாளர் எண்ணிக்கைகுறித்த விவரங்களை பெற்று, தேர்வாணையம் இறுதி செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு, பொங்கலுக்குப் பின் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.   சில ஆண்டுகளாக, தமிழக அரசின் பல்வேறு துறைகளில், புதிய பணியாளர்களை நியமனம் செய்யும் பணி, வேகம் எடுத்து வருகிறது. 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. துறை வாரியாக, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்குஎடுக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி.,- டி.ஆர்.பி., மூலமும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பல்வேறு வகையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.   அரசுப் பணிகள், தொய்வின்றி, முழுவீச்சில் நடப்பதற்கு வசதியாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில், முதல்வ