11 July 2017

நீல நிறத்தில் பிளஸ் 2 சான்றிதழ் : தமிழில் மாணவர், பள்ளி பெயர்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று துவங்கியது. முதல் முறையாக, மாணவர், பள்ளிகளின் பெயர்கள், தமிழில் இடம் பெற்றிருந்தன. 

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, மே, 12ல் தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது, ஆன்லைன் மூலம், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின், மறுமதிப்பீடு, மறுகூட்டல் பணிகள் முடிந்து, திருத்திய மதிப்பெண்களுடன், இறுதி மற்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று முதல் வழங்கப்படுகிறது.

தேர்வுத்துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும், இரு தினங்களுக்கு முன்னதாகவே, சான்றிதழ் கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளி பதிவேடுகளில் மாணவ, மாணவியர் கையெழுத்திட்டதும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அங்கேயே, பிளஸ் 2 சான்றிதழின் படி, வேலை வாய்ப்புக்கான பதிவு பணிகளும் துவங்கி உள்ளன.

மாணவ, மாணவியர் தங்களின், 10ம் வகுப்பு வேலை வாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை நகல், மொபைல் எண்ணுடன் பள்ளிகளில், வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம். வரும், 24ம் தேதி வரை பதியும் அனைத்து மாணவர்களுக்கும், ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், போலிகளை தடுக்க, ஒவ்வொரு முறையும் வண்ணம் மற்றும் வடிவம் மாற்றப்படும்.

இந்த ஆண்டு, நீல வண்ணத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், முதலில் தமிழிலும், பின் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. மாணவரின் புகைப் படம், சான்றிதழ் வரிசை எண், அசல் சான்றிதழ் ஆய்வுக்கான பார்கோடு குறியீடு, அரசு மதிப்பெண் பட்டியல் எண், தேர்வு பதிவு எண், 10 இலக்க நிரந்தர பதிவு எண், பிறந்த தேதி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பள்ளியின் பெயர், மாணவர் படித்த கல்வி மாவட்ட குறியீட்டு எண் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் விரைவு சாதி சான்றிதழ்

விரைவு சாதி சான்றிதழ்கள் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அறிவித்துள்ளார். 

வருவாய் துறை மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் ெவளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

  • 3.50 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வழங்கப்படும்.
  • கடல் அரிப்பு, இடி, மின்னல், சுழல்காற்று மற்றும் சூறைக்காற்று ஆகியவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இனிவரும் காலங்களில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும்.
  • கலப்பு திருமண சான்றிதழ், விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி/ கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி சான்றிதழ் ஆகிய 15 வருவாய் சேவைகள் கூடுதலாக இணையத்தளம் மூலமாக வழங்கப்படும்.
  • விவசாயிகளின் நலனுக்காக இ-அடங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 
  • இ-சேவை மையங்கள் மூலமாக விரைவு சேவை கட்டணமாக ரூ.250 செலுத்தி விரைவு சாதி சான்றிதழ்கள் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். 
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் களப்பணியாளர்களை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆண்டொன்றுக்கு ரூ.75 லட்சம் செலவு மேற்கொள்ளப்படும்.
  • ஆபத்து கால நண்பன்(ஆப்த மித்ரா) திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பயிற்சி திட்டம் வழங்கப்படும்.
  • வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஆளில்லா வானூர்தி மூலம் வான்வழி புகைப்படவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • பேரிடர்களை எதிர்கொள்ள பல்துறை நிபுணர்கள் நியமனம் மற்றும் வறட்சி கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
  • குறுவட்ட அளவர்களுக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்படும்.
  • 1140 குறுவட்ட அளவர்களுக்கு 3ம் தலைமுறை தரவு அட்டை வழங்கப்படும். என்பது உள்ளிட்ட 22 அறிவிப்புகளை அமைச்சர் உதயக்குமார் வெளியிட்டார்.

TRB : சிறப்பு பாட ஆசிரியர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு


சிறப்பு பாட ஆசிரியர் நியமனத்துக்கான, பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2012ல், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், சிறப்பு பாடங்களை கற்பிக்க நியமிக்கப்பட்டனர். 

இவர்களுக்கு, தொகுப்பூதியத்தில், மாதம், 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கேட்டு, போராடி வருகின்றனர்.

இந்நிலையில், போட்டி தேர்வுகள் மூலம், ஓவியம், தையல், இசை மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றில், 1,188 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். போட்டி தேர்வுக்கான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது; ஆக., 19ல், தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான பாடத்திட்டம், நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை செயலராக சபிதா இருந்த போது, 2015ல், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே பாடத்திட்டம், இந்த போட்டி தேர்வுக்கு பின்பற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...