28 May 2022

 1 முதல் 11ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை : அரசுப்பள்ளிகளில் ஜூன் 13ல் தொடங்கும் !!




தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள், கோடை விடுமுறைக்குப் பின் வரும் 13-ம் தேதி திறக்கப்பட உள்ளன.


1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் வரும் கல்வியாண்டுக்கான ( 2022-23 ) வகுப்புகள் தொடங்க உள்ளன.


வரும் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இடைப்பட்ட வகுப்புகளான 2,3,4,7,8,10 ஆகியவற்றுக்கும் ஜூன் 13-ம் தேதியே சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின் போதே அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் தாமதமாக தொடங்கும் சேர்க்கையால் மாணவர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 தமிழக அரசு பள்ளிகளில் 30 பதிவேடு கணினிமயம்


அரசு பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வந்த, 30 பதிவேடுகள், முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு உள்ளன.அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா, 100 வகை பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.


நாள், வாரம், மாதம் என, பல வகைப்பட்ட கால இடைவெளியில் இவற்றை பதிவு செய்து, அப்பதிவேடுகள் பள்ளிகளில் வைக்கப்பட்டிருக்கும்.


ஆசிரியர், தலைமை ஆசிரியர்களின் நிர்வாக சுமையை குறைக்க, 81 பதிவேடுகளை, 'எமிஸ்' என்ற இணையதளம் மூலம் பிரதி எடுக்க முடியும் என கண்டறியப்பட்டது. மேலும் தேவையற்ற, 11 பதிவேடுகளை நீக்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.இதன்படி, 30 பதிவேடுகள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இவற்றை இனி நேரடியாக பராமரிக்க தேவையில்லை என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மீதி பதிவேடுகளும் ஜூனுக்குள் கணினிமயமாக்கப்படும் என, கல்வி அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.


 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...