Posts

Showing posts from May 26, 2023
Image
  புதுச்சேரி அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்புவரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல் - கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவு புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் CBSE பாடத்திட்டம் தொடங்கப்படுவதால், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.  கடந்த 2011-ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் அரசு, CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற் கொண்டது. அதன்படி 2014-15-ஆம் கல்வி ஆண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிற்கு CBSE பாடத்திட் டம் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு வரை மாட்டும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை.  அதனை இந்த கல்வி ஆண்டில் இருந்து 6-ஆம் வகுப்பில்
  TNTET ஆசிரியர் நியமனத்தேர்வுக்கான பாட திட்டம் – வெளியான முக்கிய அப்டேட்! தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமத்திற்காக நடத்தப்படும் TET தேர்வு குறித்த முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. TNTET ஆசிரியர் தேர்வு: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான வயது வரம்பு அண்மையில் 57 ஆக உயர்த்தப்பட்டது. இதனால், ஆசிரியர் தேர்வுக்கு அதிக அளவிலானவர்கள் போட்டி போட்டு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஆசிரியர்கள் நியமனத்திற்காக நடத்தப்பட்ட TNTET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் அதன்பிறகு நடத்தப்படும் நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிக அளவில் கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்நிலையில், கடந்த மே 22ம் தேதி அன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் நியமனத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் நியமனத்தேர்வுக்கா
  TNEA2023: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: சிறப்பு கலந்தாய்வு: sports quota விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை:  2023ம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.  இதற்கான கால அட்டவணை www.tneaonline.org ல் கொடுக்கப்பட்டுள்ளது.  அதில் மாணவர்கள் தங்களது பெயருக்கு எதிரே கொடுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்.