Posts

Showing posts from July 12, 2014
SPECIAL TET: திருத்தப்பட்ட முடிவு வெளியீடு. ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,477பேர் எழுதினர்.தேர்வு முடிவு ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற 933 பேருக்கு ஜூலை 1, 2-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட கீ ஆன்சர் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன.திருத்தப்பட்ட தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) தெரிந்துகொள்ளலாம்.புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16-ம் தேதி நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், தன்விவரக்குறிப்பு, அடையாள படிவம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் இதற்கு வரத் தேவையில்லை.
FLASH NEWS : TNTET/TRB : இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் வீரமணி பெருந்துறையில் இன்று(12/07/2014) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்....மேலும் முதல்வரின் அவர்களின் கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சியில் 50 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.... மேலும் கல்வித்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.... எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.... இதன் மூலம் ஆசிரியர் தகுதிதேர்வு மற்றும் TRB மூலம் தெர்தேடுக்கபட்டவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணியமர்த்தபடுவார்கள் என தெரிகிறது.... Thanks to allindiateachersperavai.blogsp ot.com
Image
புதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன-Dinamalar Thanks to Kalviseithi