28 February 2016

TNTET : ஆசிரியர் தகுதித்;தேர்வில் (2013 ) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் பணிநியமணம் வேண்டி மார்ச் 01 முதல் தொடர் உண்ணாவிரதம்

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ம் ஆண்டு பணிநியமணத்துக்கான சான்றிதழ்; சரிபார்ப்பும் முடிந்த நிலையில் வெய்ட்டேஜ் என்னும் முறையால் வாழ்வுரிமை இழந்தனர்.... பின்னர் 2014ம் கல்வியாண்டுக்கான காலி ஆசிரியர் பணியிடமும் 2015ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் காலிப்பணியிடமும் அரசு இன்று வரை தெரிவிக்கவில்லை.

இருப்பினும் அரசு நம்மை வைத்தே இனிவரும் ஆசிரியர் பணியிடங்ளை நிரப்பும் என்று நம்பிக்கை வைத்தனர்... அனைத்தும் கானல் நீராகவே இருந்தது... அதனால் டி.இ.டி தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாயினோம்... ஆகவே அரசு டி.இ.டி 2013ல் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நமக்கு பணிநியமனம் வழங்க வேண்டியும்... வெய்ட்டேஜை திரும்ப பெறுமாறும்... இனிவரும் காலங்களில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களாகிய எங்களை வைத்தே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியும் மார்ச் 01 முதல் தொடர் போராட்டம் நடைபெற முடிவெடுத்துள்ளோம்.

நண்பர்களே...
இத்தனை நாள் ஏதோ எனக்கென்ன என்று இருந்து விட்டாய் இனியும் நீ அவ்வாறு இருந்தால் .. டி.இ.டி 2013 என்ற அத்தியாயம் முடிந்து விடும்... துணிந்து வா.. தோல்விகள் நமக்கில்லை... போராட்டம் ஒன்றும் நமக்கு புதிதல்ல... புதிரல்ல... நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு துளிக்காற்றும் கூட தேசப்பிதா காந்தி திருப்பூர் குமரன் வ.உ.சி போன்ற எண்ணற்றோர் போராடி தான் நமக்கு விடுதலை சுவாசத்தை அள்ளித்தந்தார்கள்... போராட்டக்குணம் நம் இரத்தத்தில் ஊறிப்போனது தான்... உரிமைக்காக போராடுவனே சிறந்த மனிதன்... உன்னிடம் எதிர்பார்ப்பது உன் வருகையை மட்டும் தான்... உன் பிள்ளைகள்.. உன் குடும்பத்தார்.. உன் தந்தை தாய் ...உறவினர்கள் என அனைவரோடும் கலந்து கொள்.... ஏனெனில் இது நம் இறுதிகட்ட முயற்சி.... நம் பணிநியமனம் இழந்து தவிக்கும் உன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் என அனைவரும் திரட்டு.. அரசுக்கு பணிவாய் நமது கோரிக்கையை எடுத்துரைப்போம்... அன்று சுதந்திர போராட்ட வீரர்கள் 'முழு சுதந்திரத்தை தவிர வேறு எதனாலும் திருப்தி அடையமாட்டோம்' என முழுங்கினார்கள்...

இன்று... நாம் ' பணிநியமணம் அல்லது பணிநிமணம் சார்ந்த எழுத்துப்பூர்வ அறிக்கையினால் மட்டுமே தவிர வேறு எதனாலும் நமது போராட்டதிலிருந்து பின்வாங்க போவதில்லை' ஆகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்து உங்கள் உரிமையை நிலைநாட்ட வாரிர்...

நாள் : மார்ச் 01 முதல்...
இடம் : டி.பி.ஐ வளாகம் ... சென்னை
தொடர்புக்கு:
பி.இராஜலிங்கம் 9600208188
கபிலன் 9092019692
செல்லத்துரை 9843633012 சிவா 8807148088
மாவட்ட வரியாக ஒருங்கிணைப்பாளர்கள்: திண்டுக்கல் புவனேஸ்வரி - 9688414105
விழுப்புரம் நடராசன் - 9443517563
சிவகங்கை சமையமுத்து – 9843519554
வேலூர் நந்தகுமார் - 9965855880
மதுரை 7598360223
விரைவில் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண்கள் வெளியிடப்படும்
இன்று வி.ஏ.ஓ., தேர்வு; 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

கிராம நிர்வாக அலுவலர் என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்துத்தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.தமிழக வருவாய் துறையில், காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, இன்று தமிழகம் முழுவதும், 244 இடங்களில், 3,466 மையங்களில் நடக்கிறது. தேர்வில், 10 லட்சத்து, 27 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். சென்னையில் மட்டும், 77 ஆயிரம் பேர், 250 தேர்வு மையங்களில், இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்த முறை, வி.ஏ.ஓ., தேர்வில், எந்த விதமான முறைகேடும் நடக்காமல் இருக்க, வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏ.பி.சி.டி., என்ற நான்கு வகைகளில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள், இந்த முறை, பதிவு எண் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. இதனால், ஒரு தேர்வு அறையில் யாருக்கு, எந்த வகை வினாத்தாள் வரும் என்பதை கணிக்க முடியாது. தேர்வர்கள், சைகை அடிப்படையில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்களுக்கு, மற்ற நபர்கள் மூலம், விடையை தெரிந்து கொள்ள முடியாது. டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...