13 October 2022

 விழுப்புரம் வட்டத்தில் உள்ள 7 கிராம உதவியாளர் களுக்கான காலிப்பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் தகவல்.



தமிழக முழுவதும் கிராம  உதவியாளர்களுக்கான 2748 காலிப் பணியிடங்கள் உள்ளன.  இப் பணிக்குநேற்று முதல்  விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ வருவாய்த்துறை இணையதளம் விண்ணப்பிக்கப்படுகின்றன.


 விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் வட்டத்தில் 7 கிராம உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது எனவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியுள்ளதாவது:-

விழுப்புரம் வட்டத்தில் 7 கிராமத்தில்  கிராம உதவியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியினை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 


1.விழுப்புரம் வட்டத்தில் அற்பிச்சப் பாளையம் கிராமத்தில் உள்ள கிராம உதவியாளர்பணியிடத்திற்கு பொதுப் பிரிவு  பெண்கள் விண்ணப்பிக்கலாம் (முன்னுரிமைற்றது) 

2.ஆழியூர் உள்ள ஒரு காலி பணியிடத்திற்கு எஸ்.சி.பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்கலாம் (முன்னுரிமை)

3 கண்டமங்கலத்தில்  ஒரு காலி பணியிடத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்விண்ணப்பிக்கலாம்.(டி.என்.டி)முன்னுரிமை பொது

4.கலிஞ்ச்குப்பத்தில் உள்ள ஒரு காலி பணியிடத்திற்கு பின் தங்கிய வகுப்பினர்விண்ணப்பிக்கலாம் (பொது)

5.கெடார் கிராமத்தில் உள்ள ஒரு காலி பணியிடத்திற்கு பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம் (முன்னுரிமையற்றது) 

6.கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள காலி பணியிடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் (முன்னுரிமை அற்றது)பெண் விண்ணப்பிக்கலாம்

7.பில்லூர் கிராமத்தில் உள்ள காலி பணி இடத்திற்கு பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய தேதி 10.10  2022 கடைசி நாள் :07-11-2022 . முறை ஆஃப்லைன் அதிகாரப்பூர்வமான இணைய தளம் https,//w.w.w .tn.gov.in

மேலும் விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரப்பூர்வ இணையதளம்

https://villupuram.nic.in

என்ற முகவரியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

இப்பணிக்கான கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பதாரர் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள் ,அவர்களுடைய

 காலி பணியிடங்கள் உள்ள பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  வயதுவரம்பு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும் இது அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும்.அதிகபட்சமாக

பொதுப் பிரிவினருக்கு 32வயதும்மற்ற பிரிவினர்களுக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு  காலமுறை ஊதியம்  ரூ11,110/-ரூ 35100/=

 

எழுத்து மற்றும் படித்தல் திறன் தேர்வு:30.11.2022நடைபெறும் அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு 15.12.2022 மற்றும்16.12.2022 நடைபெறும்.

மேலும் இந்த அறிய வாய்ப்பினை நமது வருவாய்  வட்டத்தைச் சேர்ந்தவர்கள்  பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

 பள்ளிக்கல்வித் துறையில் 3,118 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்



பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2,849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 269 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


 பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2,849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 269 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட "இல்லம் தேடி கல்வி", "நம் பள்ளி நம் பெருமை" பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (13.10.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2,849 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் 269 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகளை வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், இ.ஆ.ப., தொடக்கக்கல்வி இயக்குநர் க. அறிவொளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 டிஎன்பிஎஸ்சி-யில் சிறைத்துறையில் வேலைவாய்ப்பு .. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!




தமிழக சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.



அதன்படி இன்று அக்டோபர் 13-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.


இதில் காலியாக உள்ள சிறை அதிகாரி ஆண் 6 மற்றும் சிறை அதிகாரி பெண் 2 பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தேர்வு, டிசம்பர் மாதம் 22-ந் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது.


காலையில் பாடப்பிரிவு சார்ந்த தேர்வும் (300 மதிப்பெண்கள்) பிற்பகலில் தமிழ் தகுதித் தேர்வு (150 மதிப்பெண்கள்) மற்றும் பொதுப்பாடத் தேர்வும் (150 மதிப்பெண்கள்) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


இதுதவிர நேர்காணல் மற்றும் பதிவு தொடர்பாக 80 மதிப்பெண்கள் என மொத்தம் 680 மதிப்பெண்களுக்கு தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருக்கிறது. மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 தமிழகத்தில் டெட் தேர்வு நாளை தொடக்கம் இந்த தேர்வை 4 லட்சம் பேர் எழுதுகின்றனர்: அதிகாரிகள் தகவல்



அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) நாளை தொடங்குகிறது.



நாளை(14-10-2022)  தேதி முதல் 19-10-2022 தேதி வரை நடக்கும் இந்த தேர்வில் 4 லட்சம் பேர் எழுத உள்ளனர். ஒன்றிய அரசு கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவோர், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. 


அதன்பேரில் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேர் மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பித்தனர். செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை தாள் ஒன்றுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. கடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அக்டோபர் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை இரு வேளைகளில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த தேர்வுகள் கணினி வழியில் நடக்கும். இதையடுத்து ஹால்டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் முதல் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது


  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...