13 July 2014

2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலி:அரசு ஊழியர் சங்க செயலர் தகவல் ராமநாதபுரம்;'தமிழகத்தில், 2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன' என, தமிழக அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் கூறினார்.ராமநாதபுரத்தில், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:தமிழக வருவாய் துறையில், 2,000 வி.ஏ.ஓ.,க்கள்; 70 துணை கலெக்டர்கள்; வணிக வரித் துறையில், 4,600; தேர்வாணையத்தில், 150; வேலைவாய்ப்பு துறையில், 470; சமூக நலத்துறையில், 970; சத்துணவு திட்டத்தில், 25 ஆயிரம்; ஐ.சி.டி.எஸ்.,சில், 10 ஆயிரம்; கல்வித் துறையில், 5,000; உணவு பொருள் வழங்கல் துறையில், 750; நகராட்சிகளில் 17 ஆயிரம் என, 2.87 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இதில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், 2 லட்சம் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களே, அதிகளவில் காலியாக உள்ளன. 2014ல், 1.50 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர்.நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த மக்கள் தொகை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 67 ஆண்டுகளாக தொடர்கிறது. மூன்று மடங்கு அளவுக்கு ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மாறாக, தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களை கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. குறைவான ஊதியத்தால், படித்த இளைஞர்களின் வாழ்க்கை தரம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொகுப்பூதிய ஊழியர்களின் தவறுகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் உள்ளது. காலி பணியிடங்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வதால், அரசின் புதிய திட்டங்களை அமல்படுத்தும்போது, பணிச்சுமையால் ஊழியர்கள் மனஉளைச்சல் அடைகின்றனர்.பங்களிப்புடன் கூடிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தில், 1.76 லட்சம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, ஓய்வுபெறும் நாளில் கொடுக்காமல் நிலுவையில் உள்ளது.அரசு நிர்வாகங்களில் தேக்க நிலையை போக்க, காலி பணியிடங்களை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, பாலசுப்ரமணியன் கூறினார்.
15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் -தினத் தந்தி ஈரோடு, ஜூலை.13-இன்னும் 15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். பரிசளிப்பு விழாஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2013-2014ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 234 பேர் சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வீரமணி பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 20 ஆயிரம் ஆசிரியர்கள்முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்கிற நோக்கில் விஷன்-2023 திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் முதல் படியாக கல்வி மற்றும் மருத்துவத்துறையை அறிவித்தார். அதன்படி கல்வித்துறைக்காக ரூ.17 ஆயிரத்து 737 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து உள்ளார்.முதல்-அமைச்சரின் சீரிய பணியால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்து வருகின்றன. மாணவ-மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கல்வித்துறையில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். இன்னும் 15 நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.
FLASH NEWS:TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன இதற்கிடையில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது. அம்மனுக்கள் நாளை(14.07.2014) நீதியரசர் சுப்பையா அவர்களால் விசாராணை செய்யப்பட உள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்-Dinamalar கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது. தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி முந்தைய காங்கிரஸ் அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட், 23ல் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தேதியின் அடிப்படையில், யார், யார் டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்ற விளக்கத்தை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), கடந்த, 2012, மே, 28ல் வெளியிட்டது. *அதன்படி, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும் (இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்), டி.இ.டி., தேர்வை கட்டாயம் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இதற்கு, 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. *மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, குறிப்பிட்ட தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றவர்களும், மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, பணி நியமனமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை. *புதிய ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்ச்சிக்குப் பிறகே, பணி நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, 5 ஆண்டுகள் கால அவகாசம், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.இந்நிலையில், 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனரா என்ற விவரம், கல்வித் துறையிடம் இல்லை. எனினும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் இருப்பதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது. கேள்விக்குறி: இவர்களுக்கான காலக்கெடு, அடுத்த ஆண்டுடன் முடிவதால், இவர்கள், தொடர்ந்து பணியில் நீடிக்க முடியுமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:குறிப்பிட்ட தேதிக்குப் பின், அரசு பள்ளிகளில் நியமனம் ஆன ஆசிரியர் அனைவருமே, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். 2012 டி.இ.டி., தேர்வில், 2,448 பேர், அதே ஆண்டின் இறுதி யில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வில், 21 ஆயிரம் பேர், அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.இவர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றதற்குப் பின்னரே, பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். எனவே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பிரச்னை இல்லை.தனியார் பள்ளிகளில், மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின், எத்தனை ஆசிரியர் பணியில் சேர்ந்தனர் என்ற விவரம், மாவட்ட வாரியாக சேகரிக்கப்படும்.இவர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்றால், கண்டிப்பாக, கால அவகாசம் நீட்டிப்பாகும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். - நமது நிருபர் -

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...