Posts

Showing posts from March 20, 2022
Image
  பேப்பர் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு ரத்து... மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை இலங்கையில் பேப்பர் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த 1948-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் போதுமான டாலர்கள் இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் பேப்பரை பொருத்தளவில் அவை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் பேப்பரை இறக்குமதி செய்வதற்கு போதுமான டாலர்கள் இல்லாததால் பேப்பருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இலங்கை கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வு நடத்துவதற்கு போதுமான பேப்பர் மற்றும் அச்சு மை இல்லாத காரணத்தால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்' நட
Image
  புதுச்சேரியி ல் கான்ஸ்டபிள் பணிக்கு எழுத்து தேர்வு விடை குறிப்புகள் இணையத்தில் வெளியீடு புதுச்சேரியில் ஐந்து மையங்களில் நடந்த கான்ஸ்டபிள் தேர்வில் 2627 பேர் பங்கேற்றனர்.புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 390 கான்ஸ் டபிள் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜன., 19ம் தேதி முதல் உடல் தகுதித் தேர்வு நடந்தது. இதில் ஆண்கள் 2,207 பேர், பெண் கள் 687 பேர் என மொத்தம் 2,894 பேர் தேர்வாகினர்.டெக் ஹேண்ட்லர் பணிக்கு தேர்வானவர்கள் மற்றும் விளையாட்டு பிரிவு நீங்கலாக, 2644 பேருக்கு எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.லாஸ்பேட்டை விவேகா னந்தா மேல்நிலைப்பள்ளி, இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாத்திமா மேல்நிலைப் பள்ளி, இதயா கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 5 மையங்களில் தேர்வு நடந்தது.புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்த்திருத்த துறை தேர்வை நடத்தியது.காலையில் முதல் தாள் தேர்வு, மாலையில் 2ம் தாள் தேர்வு நடந்தது.தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 2644 பேரில், ஆண்கள் 1952, பெண்கள் 675 என மொத்தம் 2627 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வின் விடைகள் https://recruitment.py.gov.in/police என்ற இணையத
Image
  யுபிஎஸ்சி மாதிரி ஆளுமை தேர்வு: தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு யுபிஎஸ்சி மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற மொத்தம் 80 தேர்வர்களில், 12 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளரும் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் 2021-2022-ஆம்
Image
  முதுகலை பட்டதாரிகளா நீங்கள்? ஏப்ரல் 4க்குள் மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கவும்! தஞ்சாவூரில் செயல்பட்டுவரும் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள துணை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆராய்ச்சி உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. துணை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். துணை ஆசிரியர் பணிக்கானத் தகுதிகள்: கல்வித் தகுதி : M Tech./M.Sc./Ph.D. with specialization in Post-Harvest Technology/ Food Technology/ Food Engineering/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/Chemistry/ Analytical Chemistry/Biochemistry or Agricultural Engineering / Chemical Engineering specialized in Food Process Engineering
Image
  திண்டிவனத்தில் 26ம் தேதிதனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 26ம் தேதி திண்டிவனத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பாலமுருகன் செய்திக்குறிப்பு:திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை 9:00 முதல் மாலை 3:00 வரை முகாம் நடக்கிறது. இதில், 120க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, பி.டெக்.,-நர்சிங், எம்.பி.ஏ., கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.  இதற்காக, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146 226417 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
Image
  பாடப்புத்தகங்கள் சில்லறை விற்பனைக்கு அரசு அனுமதி பள்ளி மாணவர்களுக்காக அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளி பாடப்புத்தகங்களை விற்பனை செய்வதற்கு தமிழ்நாட்டில் மொத்தம் 276 சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.  அச்சில்லறை விற்பனையாளர்கள் விவரங்கள் மற்றும் பாடநூல்களின் விலைப்பட்டியல் www.textbookcorp.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாடநூல் விற்பனை செய்ய விரும்பும் சில்லறை விற்பனையாளர்களும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Image
  போட்டி தேர்வுக்காக 5 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நுாலகம் போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தமானவர்கள் படிப்பதற்கு வசதியாக விருதுநகர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நுாலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக , ''மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆர்.சாந்தா கூறினார். வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பணிகள் தொழில் நெறி வழிகாட்டி மையத்தில் வேலை வாய்ப்பு பதிவு, புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குவது, போட்டு தேர்வுகளுக்கு ஆயத்தமாபவர்களுக்கு பயிற்சி வழங்குவது, வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 92,508 ஆண்,1, 05,506 பெண் என 1,97,914 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.யார், யாருக்கு உதவித் தொகை10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு முடித்து பள்ளி கல்லுாரி நேரடியாக தொடராமல் டுட்டோரியல், தொலைதுார கல்வி முறையில் பயிலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு கடந்த 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. 10 ம் வகுப்பு முடித்து பதிவு செய்த மாற்று திற
Image
  குரூப் 2, 2A தேர்வர்களுக்கு அலெர்ட்.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. உடனே போங்க.!!! குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களின் விவரங்களைத் தவறாக உள்ளீடு செய்திருந்தால் அதைத் திருத்தம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " குரூப் 2, குரூப் 2ஏ தேர்விற்கு, இணைய வழியில்‌ விண்ணப்பிக்க 23 கடைசி நாள்‌ ஆகும். அத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில்‌, பலர்‌ விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த‌ பிறகு, சில தகவல்களைத் தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும்‌, அவற்றைத் திருத்தம்‌ செய்ய அனுமதிக்கக் கோரியும்‌ தேர்வாணையத்தைத் தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாகத் தொடர்புகொண்டனர். எனவே தேர்வர்களுக்கு, வாய்ப்பளிக்கும்‌ வகையில்‌ மேற்கூறப்பட்ட பதவிகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள விரும்புவோர்‌ 14 முதல் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களே தனது OTR மூலமாக திருத்தம்‌ மேற்கொள்ளளாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், திருத்தங்களை மே