16 December 2017

கிராம நிர்வாக அலுவலர், குரூப்–4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்–4, கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தேர்வை அடுத்த ஆண்டு பிப்ரவரி 11–ந் தேதி நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க 13–ந் தேதி கடைசி நாள் என நிர்ணயிக்கப்பட்டது.

இத்தேர்வுக்கு தேர்வாணைய வரலாற்றிலேயே முதல்முறையாக 18 லட்சத்து 33 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இருப்பினும் ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டும், இதர விண்ணப்பதாரர்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 20–ந் தேதி கடைசி நாள் என காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்த 21–ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு தொடர்பாக ஆயத்தப்பணிகள் நடந்து வருவதாலும், குறுகிய கால இடைவெளியே உள்ளதாலும் இதன்பிறகு எக்காரணம் கொண்டும் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. எனவே அனைத்து மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'செட்' தேர்வு அறிவிப்பு

பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது. 
இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் பேராசிரியர் 
பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' அல்லது தமிழக அளவிலான, 
'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழக 'செட்' தேர்வை, 
அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை, இரண்டு 
ஆண்டுகளாக நடத்தி வருகிறது.


இந்த ஆண்டுக்கான தேர்வை, தெரசா பல்கலையே நடத்துகிறது. இதற்கான 

அறிவிப்பு, தெரசா பல்கலையின்,www.motherteresawomenuniv.ac.in 
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான, செட் 
தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்க உள்ளது.இதற்கான, 
ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது. பிப்.,9க்குள் 
விண்ணப்பிக்க, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கூடுதல் 
விபரங்களை, தெரசா பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை இயக்ககம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது

+2 தேர்வு அட்டவணை விபரம்:

01.03.18 - தமிழ் முதல் தாள்
02.03.18 - தமிழ் இரண்டாம் தாள்
05.03.18 - ஆங்கிலம் முதல் தாள்
06.03.18 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
09.03.18 - வணிகவியல் /  மனையியல் / புவியியல்
12.03.18 - கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
15.03.18 - அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்/ தொழில் கல்வி தியரி
19.03.18 - இயற்பியல் / பொருளியல்
26.03.18 - வேதியியல் / கணக்குப் பதிவியல்
02.04.18 - உயிரியல் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்
06.04.18 - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ் -தமிழ்)


+1 தேர்வு அட்டவணை விபரம்:

07.03.18 - தமிழ் முதல் தாள்
08.03.18 - தமிழ் இரண்டாம் தாள்
13.03.18 - ஆங்கிலம் முதல் தாள்
14.03.18 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.18 - கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
23.03.18 - வணிகவியல் /  மனையியல் / புவியியல்
27.03.18 - இயற்பியல் / பொருளியல்
03.04.18 - வேதியியல் / கணக்குப் பதிவியல்
13.04.18 - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ் -தமிழ்)
16.04.18 - அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்/ தொழில் கல்வி தியரி


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:

16.03.18 - தமிழ் முதல் தாள்
21.03.18 - தமிழ் இரண்டாம் தாள்
28.03.18 - ஆங்கிலம் முதல் தாள்
04.04.18 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.04.18 - கணிதம்
12.04.18 - மொழி (விருப்பத் தேர்வு).
17.04.18 -  அறிவியல்
20.04.18 - சமூக அறிவியல்

  டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்...