Posts

Showing posts from February 12, 2014
Today PG Trb case details  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள TRB PG வழக்குகள் (முதுகலை பட்டதாரி தமிழ்-முதுகலை ஆசிரியர் இதர படங்களில் -(except Tamil) நீதியரசர். ஆர் .சுப்பையா முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்து. பிற்பகல் தலைமை நீதிபதி அவர்களின் பிரிவு உபசார விழா காரணமாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 26-ல் ஸ்டிரைக் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ல் உள்ளிருப்பு போராட்டமும் 26-ல் வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப் போவதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் தமிழக அரசு எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து எங்களது மாநில செயற்குழுக் கூட்டத்தை சென்னையில் செவ்வாய்க் கிழமை நடத்தினோம். அதில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்
Image
TET மதிப்பெண் சலுகை 2012 தேர்வர்களுக்கும் வேண்டும்
TRB PG சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவருகின்ற வழக்குகள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள TRB PG வழக்குகள் (முதுகலை பட்டதாரி தமிழ்-முதுகலை ஆசிரியர் இதர படங்களில் -except Tamil ) நீதியரசர். ஆர் .சுப்பையா முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வழக்குகளின் நிலை மாலையில்தான் தெரியவரும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி -தின மணி  ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து கூடுதலாக 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 மற்றும் 10 வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளதால் இந்த 45 ஆயிரம் பேர்களுக்கு ஏப்ரல் மே மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன‌
டி.இ.டி.,புதிய மதிப்பெண் டி.ஆர்.பி., இணையத்தில்-தின மலர்  ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார்.  இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்கைள, மீண்டும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82)எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம்.  மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவற விட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தை அறிய முடிய வில்லை என்றும், டி.ஆர். பி.,யிடம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண்களையும், மதிப்பெண் விவரங்கைளயும் அறிந்து கொள்ளலாம்.  முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை தாண்டிய