13 January 2014

உடலில் ஆரோக்கியம் பொங்க... முகத்தில் சிரிப்பு பொங்க... வாழ்வில் மகிழ்ச்சி பொங்க... பொங்கட்டும் தை பொங்கல். பொங்கல்போல் நம்வாழ்வும் பொங்கட்டும்....
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி மனிதாபிமான அடிப்படையில் வாய்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவை (குறிப்பிட்ட பாடங்கள் நீங்கலாக) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அத்துடன் மனிதாபிமான அடிப்படையில் சிலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலைப் பட்டதாரிகள் தேர்வு எழுதினர். தமிழ் நீங்கலாக மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபர் 22, 23 மற்றும் நவம்பர் 11-ம் தேதி நடந்தது. இந்நிலையில், தமிழ் பாட தேர்வு முடிவு ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. அதன்பிறகு இறுதித் தேர்வு பட்டியலும் வெளியானது. ஆனால், வழக்கு காரணமாக மற்ற பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியல் வெளியிடப்படவில்லை. 

திருத்தப்பட்ட முடிவு வெளியீடு இதற்கிடையே ஆங்கிலம், பொருளாதாரம், உயிரி-வேதியியல், கணிதம், மனையியல், தெலுங்கு, விலங்கியல், உடற்கல்வி, புவியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து திருத்தப்பட்ட தேர்வு முடிவை வெளியிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்து மேற்கண்ட பாடங்களுக்கான திருத்தப்பட்ட கீ ஆன்சர் மற்றும் திருத்தப்பட்ட முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்நடக்க உள்ளது. 

ஏற்கெனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தேவையில்லை. பட்டியலில் புதிதாக இடம்பெற்றவர்கள் மட்டும் வந்தால் போதும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் 
( www.trb.tn.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தேவையான சான்றிதழ்களுடன் உயர் நீதிமன்ற உத்தரவையும் கொண்டுவர வேண்டும். முன்பு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறியவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தற்போது ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களும் விழுப்புரத்தில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம். 

எனினும். காலியிடங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் பரிசீலிக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
TRB TNTET PAPPER II CUT OFF CALCULATION

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்)எடுக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண்ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். 

தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்.தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். 

 பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் 

12–ம் வகுப்பு 
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்) 
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண் 
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண் 
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண் 
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

 பட்டப் படிப்பு 
 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண் 
50 சதவீதத்திற்கு கீழ். – 10 மதிப்பெண்

 பி.எட். படிப்பு 
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல். – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண் 

தகுதித்தேர்வு 
 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல். – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண் 
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண் 
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது,சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு ஒரு சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி,அந்தச் சட்டத்தினை1994ஆம்ஆண்டு அரசமைப்பு (76ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து,சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும்,என்னையுமே சாரும். 

இதே போன்று,ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் சமூகநீதி கடைபிடிக்கப் படவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். மத்திய அரசின் உத்தரவுப்படி,ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களையே ஆசிரியராக நியமிக்க இயலும். 

எனவே,ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில்18,647ஆசிரியர்கள் மற்றும் போட்டித் தேர்வின் மூலம்2,273ஆசிரியர்கள் என மொத்தம்20,920ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்,கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது,பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு தான். 

கல்லூரிஆசிரியராகபணியமர்த்தப்பட‘ஷிலிணிஜி’மற்றும்‘ழிணிஜி’தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எவ்வாறு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதோ,அதே போன்று தான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் மத்திய அரசால் கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தான் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. 

இந்த ஆசிரியர் நியமனத்தில்69விழுக்காடு இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை கருணாநிதிக்கு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 2014ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் அ.தி.மு.க. கொள்கைகள் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் சூழ்நிலை உருவாகும் போது,உச்ச நீதிமன்ற ஆணையினை மாற்றும் வகையில் உரிய திருத்தங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 மொத்தத்தில், “அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு”என்ற பழமொழிக்கேற்ப கருணாநிதியின் அறிக்கையை படித்துப் பார்த்தால் அத்தனையும் புளுகு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...