Posts

Showing posts from April 28, 2022
Image
 டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்..! ஜூன் 26 ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றம். ஜூன் 26-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 04.04.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 10/2022-ல், 26.06.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வானது, 02.07.2022 மு.ப பி.ப அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
 TNPSC - குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிகிறது.   குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட 30 நாட்கள் காலக்கெடு இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது. நேற்று மாலை வரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 17 லட்சத்து 83 ஆயிரத்து 590 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குரூப் 4 தேர்வுக்கு ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும்’’ என்றார்.
Image
 ரூ.56,100/- ஊதியத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!! காலிப்பணியிடங்கள்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 16 வயது வரம்பு: 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். கல்வி தகுதி: பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தின் சமூகவியல் அல்லது சமூகப் பணி அல்லது உளவியல் அல்லது குழந்தை மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செயல் முறை: Computer Based Test Interview சம்பள விவரம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - ரூ.56,100 - 2,05,700/- விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in என்ற இணைய முகவரி மூலம் 01.04.2022 முதல் 30.04.2022 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Image
 TNPSC:இன்றே கடைசி நாள் - குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க லிங்க் உள்ளே! தமிழகத்தில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 7,382 இடங்களை நிரப்ப ஜூலை 24-ல் குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வினை எழுத கடந்த மார்ச் 30 முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். TNPSC அலுவலகத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:"மார்ச் 30 முதல் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெறும் .மேலும், குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும்",என்று அறிவித்தார்.